
முன்பொரு காலத்தில் ஒரு அழகிய நாட்டை ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.
அவன் தேவனுக்கும், மனிதனுக்கும், தன் மனதிற்கும் அஞ்சாதவனாய் வாழ்ந்துவந்தான். இப்படி இருக்க ஒருநாள் அவன் தனக்கு வாரிசு பிறந்ததை கொண்டாட ஒரு நாளை நியமித்து, அந்த நாளில் தன் ராஜியத்தின் மக்கள் கேட்கும் யாவற்றையும் அவரவர்களுக்கு கொடுக்க நினைத்தான். அந்த நாளும் வந்தது, அனைவரும் தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுச்சென்றனர் . அந்த வேலை ஒரு மனிதன் ஒருவன் அவரிடத்தில் வந்து, எனக்கு மன்னர் அணிந்திருக்கும்
ராஜவஸ்த்ரம் வேண்டும் என கேட்டான். அதை கேட்டு "
இவன் தன் தகுதிக்கு மேல் கேட்கிறானே" என மன்னர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். ஆனாலும் ராஜா நியமித்த அந்த நாளில் அவனை தண்டிக்க மனதில்லாமல் அனுப்பிவிட்டார். அந்த மனிதனோ
தினமும் மன்னரின் விசாரிப்பு நேரத்தில் முதல் ஆளாக வந்து, மன்னா எனது ஆசயை நிறைவேற்றுங்கள் என்று
கேட்பதும்; அங்குள்ளவர்கள் அவனை வெளியில் அனுப்புவதும் வழக்கமான ஒரு செயலானது. இருப்பினும் அந்த மனிதன் தன் செயலை நிறுத்துவதாக இல்லை. யார் தடுத்தாலும் அவர்களையும் மீறி உள்ளே நுழைந்து விடுவான்; சில நேரங்களில் உள்ளே நுழைய முடியாவிட்டாலும் வாசலில் நின்றபடியே தன் குரலை உயார்த்தி "
அரசே எனக்கு ராஜவஸ்த்ரம் அணிய ஆசை, அதை நிறைவேற்றுங்கள்" என்று மன்னர் காதுக்கு எட்டும்படி வேண்டுவான். யாருக்கும் அஞ்சாத அந்த அரசர் ஒருசமயத்தில் இவன் வருகிறான் என்றாலே பயந்து ஒதுங்கும் நிலை வந்தது. இந்த செயல் தொடரவே, இவன்
தொல்லை தாங்கமுடியாத அரசர் ஒருநாள்
அந்த மனிதனை உள்ளே அழைத்து அவனுக்கு ஒரு புதிய ராஜவச்திரத்தையும், அதனோடே கூட பொன்னையும் வெள்ளியும் கொடுத்தனுப்பினார்.
சாதாரண மனிதனே ஒரு விஷயத்தை நாம் விடாமல் கேட்டால் செய்கிறான் என்றால்,
தேவன் செய்யாதிருப்பாரோ?எந்த ஒரு செயலையும், தோல்வியை
பார்க்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.(லூக்கா 18:1-5)
2 comments:
very nice...
Thank u mercy. Thanks for your visit and comment
Post a Comment