
ஞானமுள்ள ஒரு மனிதன், சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை துவங்கி அதை லாபகரமாகவும் நடத்திவந்தார். ஒரு காலகட்டத்தில் தன் தயாரிப்புகளை பற்றி சில புகார்கள் எழும்ப நிறுவனத்தின்
லாபம் கணிசமான அளவு
குறைந்தது. புகார் என்னவென்றால், இந்த நிறுவனத்தில் இருந்து வரும் பல சோப்பு பெட்டிகள் காலியாகவே
உள்ளது என்பதுதான். இதை அறிந்த அந்த மனிதன் தன் நிறுவன அதிகாரிகள், ஆலோசனை குழுக்கள் எல்லோரையும் அழைத்து ஒரு
கூட்டம் நடத்தினர். அதன் முடிவாக, காலி சோப்பு பெட்டிகளை பிரித்தெடுக்க இரண்டு கோடியில் ஒரு
நவீன எந்திரம் வாங்க முடிவெடுக்கப்பட்டது. அந்த எந்திரம் வந்தால் அதை எங்கு அமைப்பது என்று பார்பதற்காக அந்த நிறுவனரும் அவரது குழுவும் அந்த தொழிற்சாலைக்கு சென்றது. அவர்கள் அங்கே குழிமியத்தை பார்த்த ஒரு தொழிலாளி அங்கே சென்று அவர்கள் வந்ததற்கான காரணத்தை அறிந்து அவன் நேராக சோப்பு அட்டையில் அடைக்கப்பட்டு வெளியேவரும் கன்வேயர் பெல்ட் அருகே சென்றான், சக தொழிலாளர்களும் முதலாளியும் அவன் என்ன செய்ய போகிறான் என்று குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்தனர். அங்கே சென்ற அவன், அங்கிருந்த ஒரு மின் விசிறியை (Fan) கன்வேயர் பெல்ட் பக்கமாக திருப்பி வைத்தான். அப்போது அங்கே இருந்த காலி அட்டை பெட்டிகள் தானாக பறந்து கீழே விழுந்தன, நல்ல பெட்டிகள் மட்டும் வெளியே வந்தன. இதை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இரண்டு கோடிக்கு ரூபாய் செலவை வெறும் ஐந்நூறு ரூபாயில் முடித்துவிட்டார்.
ஏட்டு கல்வி மட்டுமே அறிவை தந்துவிட முடியாது, அனுபவக்கல்வியும் தேவை.
No comments:
Post a Comment