Wednesday, February 25, 2009

ஆஸ்கார் - இந்தியா


ஆஸ்கார்:

சினிமா உலகின் தலை சிறந்த விருதான ஆஸ்கார் (அகடமி) விருது வழங்கும் விழா முதன் முதலில் 1927 -ம் ஆண்டு மே மாதம் வழங்க பட்டது.

ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்கள்...

1983 - "காந்தி" திரைப்பட ஒப்பனையாளர் (மேக்கப் மேன்)
திரு. பானு அதைய

1992 - வாழ்நாள் சாதனையாளர்
திரு
. சத்திய ஜித்ரே
.
.
.
.
.
.
.


2009 - சிறந்த பின்னணி இசை (படம்: ஸ்லம் டாக் மில்லினியர்)
திரு. . ஆர். ரகுமான்
2009 - சிறந்த இசையுடன் கூடிய பாடல் "ஜெய் ஹோ..." (படம்: ஸ்லம் டாக் மில்லினியர்)
திரு. . ஆர். ரகுமான்






2009 - சிறந்த இசை கலவை (சவுண்ட் மிக்சிங்) - (படம்: ஸ்லம் டாக் மில்லினியர்)
திரு. ரெசூல் பூ குட்டி








2009 - சிறந்த குறும்படம் (டாகுமெண்டரி படம்)
உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்ட "ஸ்மைல் பிங்கி" (இயக்குனர் : மேகன் மைலன் - அமெரிக்க)




எத்தனையோ தடைகளை தாண்டி இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் நம் உடன்பிறப்புகளை பார்க்கும்போது நான் பள்ளி பருவத்தில் புத்தகத்தின் பின் அட்டையில் பார்த்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது....

"இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்"

-ஜெய்ஹிந்த்

Wednesday, February 18, 2009

முயற்சி - குட்டிக் கதை

ஒரு நாள் ஒரு பெரிய கப்பல் பழுதாகி நின்றது, அப்பொழுது அந்த கப்பலின் முதலாளி அதை சரி செய்ய பற்பலரை கொண்டுவந்தார். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் சரிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் அதை சரி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் கப்பல் முதலாளிக்கு அந்த கப்பல் தயார் செய்தபோது அதில் வேலை செய்த ஒருவன் நினைவுக்கு வந்தான். ஆனால் அவன் இப்பொழுது மிகவும் வயதானவனாக இருப்பான். எப்படியோ கப்பல் தயார் ஆனால் போதும் என்று நினைத்து அவனை அழைத்து வர சொன்னார்.

அந்த பெரியவர் தன் கையில் ஒரு பழைய பெட்டியுடன் வந்தார். அவரிடம் நிலைமையை கூறிய கப்பல் முதலாளி அவரை கப்பலுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற அந்த பெரியவர், சிறிது நேரம் நன்றாக கப்பலை ஆராய்ந்தார், பின்னர் தன் பையில் இருந்து ஒரு சுத்தியலை எடுத்து அந்த கப்பலில் இருந்த ஒரு குழாயின் மேல் லேசாக தட்டி அதை சரிசெய்துவிட்டு சென்றார்.

கொஞ்ச காலம் சென்ற பின்பு அந்த பெரியவர் கப்பல் முதலாளி தனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கேட்டு கடிதம் போட்டார். அதில் ரூபாய் பத்தாயிரம் கேட்கப்பட்டிருந்தது. அதை கண்ட கப்பல் முதலாளி இரண்டு நிமிட வேலைக்கு இவ்வளவு கூலியா ? இதற்கான விளக்கம் தரவும் என பதில் கடிதம் போட்டார்.

அதற்கு அந்த பெரியவர், குழாய் சரி செய்ய இருநூறு ரூபாய், ஆனால் அந்த குறையை கண்டறிய ஒன்பதாயிரத்து எண்ணூறு ரூபாய் என பதில் அனுப்பி அந்த பணத்தை பெற்றார்.

"கடின உழைப்பு முக்கியம் தான் , ஆனால் காரியம் அறிந்து செயல்படுவது அதை விட முக்கியம்"

Tuesday, February 17, 2009

புகைக்காதிர்





அன்பு நண்பனே,

சில நொடிகள் சிந்தித்து பார். எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கும் நீ, ஏன் இப்படி ஒரு அற்ப "புகை"க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றாய். அந்த சில நொடி சந்தோசத்திற்காக நீ உன் எதிர்காலம் மட்டும் இல்லாமல், உன் சந்ததிக்கே தீங்கு இழைகின்றாய் எனபது ஏன் உனக்கு புரியவில்லை..?

எனக்கு தெரியும், இவை எல்லாம் உனக்கும் தெரியும் என்று ஆனாலும் நான் இப்பொழுது இதை சொல்வது உனக்கு அறிவுரை கூற இல்லை, உன்னை நீயே ஆராய்ந்து அறிய....!!

நன்றாக யோசி, உன்னால் முடியும்....!!

உன்னால் முடியாது என்றால் , யாரால்....?

நிச்சயம் உன்னால் முடியும்.

Monday, February 16, 2009

ஏழை பெண்ணும் தேவனும் - குட்டி கதை














ஒரு நாள் ஒரு ஏழை பெண் தன் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று அங்கே அவர்களோடு சேர்ந்து தேவனை துதிக்க விரும்பினால். அப்பொழுது அந்த ஆலயத்தை சேர்ந்தவர்கள் அதிக பணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பிவிட்டனர். அவள் மிகவும் மனபாரத்துடன் அந்த ஆலயத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தால்.

அந்த சமயத்தில் அந்த வாசல் வழியாக ஒரு பெரியவர் வந்தார். அவர் அந்த பெண்ணிடம் அவள் அங்கே நிற்கும் காரணத்தை கேட்டார், அவளும் நடந்த எல்லாவற்றையும் கூறினால். அதைக் கேட்ட அவர் மிகவும் மனவேதனையுடன் "அவர்கள் என்னையும் உள்ளே அனுமதிப்பதில்லை" என்று கூறினார்.

அதற்கு அவள் நீங்கள் யார் ஐயா என்று கேட்டால், அவர் "நானே சர்வத்தையும் படைத்த தேவன்" என்று கூறினார்.

தேவன் பணத்தை பார்ப்பவர் இல்லை, மனதை பார்ப்பவர்.