Wednesday, July 29, 2009

இன்னும் வீடு திரும்பவில்லை...


45
ஆண்டு தேவ ஊழியத்துக்குப்பிறகு ஒரு தம்பதியர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தன் தாய்நாட்டிற்கு திரும்பினர். அவர்கள் திரும்புவதற்கு ஒரு கப்பலில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கப்பல் அருகே வந்தபோது அங்கே மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்ததை கண்டனர். அந்த கூட்டம் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது, "கோடையில் ஓய்வெடுக்க தங்கள் தாய்நாட்டு அதிபர் வந்துவிட்டு திரும்புகிறார். அவரை பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்" என்று அறிந்தனர்.

எல்லோரும் கப்பலில் ஏறினார், கப்பலும் புறப்பட்டது. எதையோ யோசித்தவாறு வந்த அந்த தேவ மனிதர் தன் மனைவியை நோக்கி, "நாம் தவறு செய்துவிட்டோமோ?. தேவனுக்காக ஊழியம் செய்த நமக்கு கிடைக்காத மரியாதை, மனிதர்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கிடைகிறதே!" என்று கேட்டார்.

அதற்க்கு அந்த மனைவி, "அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். தேவன் எது செய்தாலும் நன்மைக்காக தான் இருக்கும்" என்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

பயணம் தொடர்ந்தது, கப்பல் சேரவேண்டிய இடத்தை அடைந்தது. அங்கேயும் மிக பெரிய கூட்டம். வாத்தியங்கள் முழங்க, மாலைகளுடன் மக்கள் வரிசையில் நின்று அந்த அதிபரை வரவேற்றனர். இந்த ஊழியரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர் தன் மனைவியுடன் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தார்.

வீட்டுக்கு வந்த அவருக்கு தனது இந்த பயணம் மிக பெரிய ஒரு குழப்பமாகவே இருந்தது. திரும்பவும் தன் மனைவியிடம் தனது நிலயை அவர் கூற. இந்த முறையும் மனைவி அமைதியாய் அவரை நோக்கி, "நீங்கள் ஏன் ஜெப அறைக்கு சென்று உங்களது இந்த கேள்விகளை தேவனிடமே கேட்கக்கூடாது?" என்றால்.

அவரும் அதை ஏற்றுக்கொண்டு ஜெப அறைக்கு சென்றார். ஒருமணி நேரம் கழித்து வெளியில் வந்த அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அவரை கண்ட மனைவி "உள்ளே பதில் கிடைத்ததா..? என்ன பதில்..?" என்று கேட்டால்.

அதற்க்கு அந்த ஊழியர், "அந்த அதிபர் தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை முடித்து வீடு திரும்பினார். எனவே அவருக்கு அந்த வரவேற்ப்பு. நான் உனக்கு கொடுத்துள்ள கடமையை முடித்து என் வீட்டுக்கு திரும்பும்போது இதை விட சிறந்த வரவேற்ப்பு உனக்காக காத்திருக்கிறது என்று தேவன் கூறினார்" என்றார்.

நீங்களும் இன்னும் வீடு திரும்பவில்லை. உங்கள் கொடுக்கப்பட்டுள்ள கடமையை முடித்து திரும்பும்போது நிச்சயம் அதன் பலன் அதிகமாய் இருக்கும்.

(2 பேதுரு 1:10,11)

Monday, July 20, 2009

தந்தயின் கரம்....

ஓர் அடர்ந்த காட்டு பகுதியில் குட்டி பெண்ணும் அவளது தந்தையும் நடந்து சென்றனர். வழியில் அவர்கள் ஒரு பெரிய கயிற்றுப்பாலத்தை கடக்க நேரிட்டது. அப்போது அந்த தந்தை தன் மகளிடம், "இது கயிற்றுப்பாலம் என்பதால் மிக குறுகலாக இருக்கும். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க என் கரத்தை நன்றாக பிடித்துக்கொள்" என்றார்.

அதற்க்கு அந்த குட்டி பெண், "இல்லை..! இல்லை ..! நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள்" என்றால். அதன் அர்த்தம் புரியாமல் அந்த தந்தை "இது என்ன புதிர்?" என்று கேட்க.

அந்த குட்டி பெண், "நான் உங்கள் கரத்தை பிடித்தால் எதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதை விட நேரலாம். ஆனால் நீங்கள் என் கரத்தை பிடித்தால் எந்த சூழ்நிலையிலும் என்னை விடமாட்டீர்கள் என்று நான் நன்றாக அறிவேன்." என்றால்.


இதே போல தான் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவும்.

நாம்
அவர் கரத்தை பிடித்திருக்கிரோமா..?

அல்லது
அவரை நமது கரத்தை பிடித்து நடத்த அனுமதித்திருக்கிரோமா..?

நாம் தேவனின் கரத்தில் நம்மை முழுதாக ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை செம்மையான பாதையில் பத்திரமாக நடத்துவார்.

(ஏசாயா 41:10)

Wednesday, July 15, 2009

மனிதனின் வார்த்தைக்கே...

அதிகாலை நேரம், நல்ல குளிரான காலநிலை. அது ரஷ்யாவை வறுமை வாட்டிய நேரம். உலகின் பிரபல எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய், காலை நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது வழியில் வந்த ஒரு யாசகர் (பிச்சைக்காரன்) அவரிடம், "ஐயா எனக்கு உதவுங்கள்" என கேட்கவே, அவரும் தன் பைகளை துளாவினார். ஆனால் அவர் வந்த வழியில் இவ்வாறு வந்த பலருக்கு உதவியதால் இப்பொது அவரது பைகள் அவருக்கு உதவும் நிலையில் இல்லை.

என்ன செய்வது என்று குழம்பிய டால்ஸ்டாய், அந்த யாசகரை கட்டி அனைத்து "சகோதரரே தற்ப்போது உங்களுக்கு உதவ என்னிடத்தில் ஒன்றும் இல்லை, மன்னித்துக்கொள்ளவும்" என்று கூறினார்.

உடனே அந்த யாசகர், "பரவாயில்லை ஐயா, நீங்கள் என்னை சகோதரன் என்று அழைத்ததே எனக்கு மிகவும் பெரிய பரிசு" என்று கூறி கண்ணீர்மல்க விடைபெற்றார்.

மனிதனின் வார்த்தைக்கு கூட இவ்வளவு மதிப்பா..?? அப்படியானால் அதை சரியாக உபயோகிப்பதில் என்ன நஷ்டம்...?

மனிதனின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பென்றால், தேவனின் வார்த்தை...!!!!

(நீதிமொழிகள் 30:5)