Sunday, February 26, 2012

பணமே காரணம்....

முன்பொருநாள் வட்டிக்கன் நகரில் உள்ள திருச்சபையில் திரு போப் அவர்களுக்கு ஒரு ஆசை, அதாவது அந்த திருச்சபையில் உள்ள சுவர்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறை பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரையிலான அனைத்தையும் ஓவியமாக தீட்ட நினைத்தார். அதற்க்கென உலகப்புகழ் பெற்ற ஓவியர் ஒருவரை ஒப்பந்தம் செய்து அந்த பணியினை தொடர்ந்தார்.

அவ்வாறு வரைந்து வருகையில், இயேசுவின் சிறு வயது தோற்றத்தை வரைய நினைக்கையில், அழகான, பிரகாசமான ஒரு மாதிரி உருவம் இருந்தால் வரைய ஏதுவாக இருக்குமென நினைத்தார். அவர் தனது விருப்பத்தை அந்த போப்பிடம் தெரிவிக்க அவர் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக ஒரு சிறு குழந்தையை தேடி அதை மாதிரியாக பயன்படுத்தினார்.

அந்த ஓவியம் முடிந்த பின் அந்த சிறுவனுக்கு கூலியாக நிறைய பணம் கொடுத்து அனுப்பிவிட்டனர். பின்னர் அந்த ஒவியார் ஒவ்வொரு படமாக முடித்தார்.. அதற்குள் சில வருடங்கள் கழிந்தது.

இப்பொழுது இயேசுவின் சிலுவை காண்டத்தை வரைய நினைத்த அவர், இயேசுவை காட்டிக்கொடுத்த கொடூரமான யூதாஸ் உருவத்துக்கு ஒரு மாதிரி தேடி அலைந்தார், இறுதியாக ஒருவன் கிடைத்தான். அனேக பொருளாசை மற்றும் கொடூர குணமுடயவனாய் இருந்த அவனைக்கொண்டு அந்த யூதாஸ் படத்தையும் வரைந்து முடித்தார். அவர் அதை முடித்ததும் அந்த மாதிரிக்கு வந்த மனிதன் அந்த ஓவியரிடம் நான் யார் என்று உங்களுக்கு உண்மையாகவே நினைவில்லையா என்றான். அதற்க்கு அவர் நினைவில்லை, நீங்களே சொல்லிவிடுங்கள் என்றார். உடன் அவன் சொன்னான் நான் தான் உங்களுக்கு குழந்தை இயேசு வரைய மாதியாய் இருந்தேன் அப்போது நீங்கள் கொடுத்த அதிக பணம் இன்று என்னை யூதாசுக்கு மாதிரியாய் மாற்றியுள்ளது என்றான்.

ஓவியர் கண்கள் குளமாயின.

வாழ்க்கைக்கு பணம் தேவை தான், அதுவே தேவைக்கு அதிகமானால் வாழ்க்கை இருக்காது.