Wednesday, February 3, 2010

தேவனின் கரம்..

ஒருநாள் ஒரு தாயும் மகனும் கடைக்குசென்றனர். அப்போது அந்த கடைகாரர் அந்த சிறுவனை கண்டு மிகவும் நேசித்தவராய் தன் கடையில் இருந்த ஒரு மிட்டாய் ஜாடியை காண்பித்து "உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்" என்றார், அனால் அந்த சிறுவன் எடுக்கவில்லை.

அந்த கடைகாரருக்கு மிக ஆச்சரியம். ஒரு சிறுவன் மிட்டாய் வேண்டாம் என்று நிற்கிறானே! ஒருவேளை தன் தாய்க்கு பயந்து நிற்கிறானோ எண்டு கருதி தாயை பார்த்தார்.

உடனே
அந்த தாயும் தன் மகனை நோக்கி "எடுத்துக்கொள்" என்றால்.

அப்போதும் அந்த சிறுவன் எடுக்கவில்லை. உடனே அந்த கடைகாரர் தானே நிறைய முட்டைகளை எடுத்து அவனுக்கு கொடுத்தார், அதை அந்த சிறுவன் மிகவும் சந்தோசமாக இரண்டு கைகள் நிறைய பெற்றுக்கொண்டான்.

வீடு திரும்பியதும் அந்த தாய் அவனிடம், நீ என் எடுக்கவில்லை என கேட்டார். அதற்க்கு அவன், "நானாக எடுத்தால் எனது கைகள் சின்னதாக இருப்பதால் கொஞ்சம் தான் எடுக்க முடியும். இப்பொது அவரே தரும்போது இரண்டு கைகள் நிறைய கிடைதுள்ளது" என்றான்.

இப்படி தான் நமது வாழ்க்கையும். நாமாக எடுத்தால் கிடைப்பதை விட கடவுளாக தரும்போது நிறையவும் கிடைக்கும், நன்மையானதாகவும் இருக்கும்.

(சங்கீதம் 27:14 - 37:9)