Saturday, August 30, 2014

மின் விசிறிகள்...

தனது அன்னையை கடந்த இருபது வருடங்களாக முதியோர் இல்லத்தில் விட்டு பராமரித்து வந்தார் அந்த பாக்யவான்.

மாதம் தவறாமல் தொகை செலுத்துவார். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதோ கடமைக்கு தனது அன்னையை முதியோர் இல்லம் சென்று பார்த்து வருவது அவர் வழக்கம்.

ஒரு நாள் அவரின் தாயார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்தது.

சட்டென்று நினைவு வந்தவராக ஓடோடி பார்க்க சென்றார்.. சாகும்தருவாயில் இருந்த தாயிடம் கரிசனமாய் கேட்டார் "அம்மா உனக்கு என்ன வேனும் கேள் வாங்கி தருகிறேன்!"

தளர்ந்து போன நிலையிலும் தாய் கேட்டாள்.. "இந்த முதியோர் இல்லத்திற்கு மின் விசிறிகள் இல்லை. வாங்கி தந்து உதவு என்றாள்.."

இதுநாள் வரை நீ இதைக்கேட்கவே இல்லையே! என்று ஆச்சரியத்துடன் கேட்டான் மகன்..

மேலும் சாகும் நிலையில் இதை ஏன் கேட்கிறாள் என குழம்பினான்..!!

தாய் சொன்னாள்..
"நான் என் கஷ்டத்தை பொறுத்துக்கொண்டேன்.. ஆனால் சில நாளில் உன் மகன் உன்னை கொண்டு வந்து இங்கு சேர்க்கும் போது என் மகன் கஷ்டப்படக்கூடாது அல்லவா அதற்க்காகத்தான் என்றாள் தாய்.

மகனை ஆவளாய் பார்த்த அவள் கண்கள் மூடின. உயிர் பிரிந்தது..!
அவன் நெஞ்சம் கனத்தது. கண்களின் ஓரம் நீர்த்துளிகள்..!!