Thursday, October 23, 2014

வலியை வழியனுப்பு...

வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மேசைமீதிருந்த கண்ணாடி குடுவையை எடுத்து உயர்த்திக் காட்டி “இது எவ்வளவு எடை இருக்கும்?” என்று கேட்டார்.

அதற்க்கு "100 கிராம், 50 கிராம்" என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

உடனே ஆசிரியர் மாணவர்களை பார்த்து “இதன் சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனால் எனது கேள்வி அதுவல்ல”;  “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” என்று கேட்டார்.

மாணவன்: “ஒண்ணுமே ஆகாது சார்”

ஆசிரியர்: "மிகச்சரியான பதில்! ஆனால் ஒரு மணி நேரம் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை வலிக்கும் சார்”

ஆசிரியர்: “ஒருநாள் முழுவதும் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

ஆசிரியர்: “மிக மிக சரியான பதில்! ஒரு மணி நேரத்துலே என் கை வலி ஏற்படுவதற்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுவதற்கும் இந்த குடுவையின் எடை கூடிக்கொண்டே போகுமா என்ன?”

மாணவன்: “இல்லை சார். அது வந்து…?!?”

ஆசிரியர்: “எனக்கு கை வலிக்காமல், மரத்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?”

மாணவன்: “குடுவையை உடனே கீழே வெச்சுடணும் சார்”

ஆசிரியர்: "மிக நேர்த்தியான பதில். பிரச்சினை இந்த குடுவைதான்"

ஒரு பிரச்சினை நமக்கு வந்தால் அதை அப்படியே மண்டைக்குல் ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் வலிக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருந்தாள் மூளை செயலிழந்து மரத்துபோயவிடும்..

அதனால்
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு உங்கள் வேலையை தொடருங்கள். அந்த பிரச்சனை தன்னால் தீரும்.