Monday, June 13, 2011

வழி காட்டும் தெய்வம்...

சின்னதொரு கிராமத்தில் குறிசொல்லி பிழைப்போட்டும் பெண் ஒருத்தி இருந்தால். அவள் தினமும் குறி சொல்ல போகும்பொழுது தன் ஊரின் எல்லையில் உள்ள நான்கு வழி சாலையின் மத்தியில் நின்று தனது குறிசொல்லும் கோலை வானத்தை நோக்கி வீசுவாள், அது எந்த திசையில் விழுகிறதோ அந்த திசையில் அன்றைய தினம் தன் பிழைப்புக்காக போவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் அவள் இதே செய்கையை பலமுறை செய்துவிட்டு இறுதியாக ஒரு வழியில் சென்றால்.

இதை கண்ட ஒரு பெரியவர் அவளை அழைத்து "எப்போதும் முதல் ஒரு முறை மட்டுமே செய்துவிட்டு அந்த வழியில் செல்லும் நீ, ஏன் இன்று இத்தனை முறை செய்தாய் என கேட்டார்."; அதற்க்கு அவள், "இது சரியான திசையை காட்டாமல் இருந்தது, எனவே அது சரியான திசையை காட்டும்வரை அதே செயலை தொடர்ந்தேன்" என்றால்.
ஆகா, அவள் தான் செல்லவேண்டிய வழியை முன்கூட்டியே முடிவு செய்து விட்டுதான் இப்படி செய்திருக்கிறாள். ஒரு காரியத்தை நம்புகிறோம் என்றால் முழுமையாக இருக்கவேண்டும். இந்த குறி சொல்லும் பெண்ணை போல தனது முடிவில் செல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்குமாயின், நமது நம்பிக்கை என்பது வீண்.

நாம் தேவன் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு நமது சுயசித்ததின் வழியில் நடக்க தேவனையும் வருத்துவோமாயின் நாம் தேவன் மீது கொண்டுள்ள அன்பு என்பது மாய்மாலம் உள்ளதாகும்.