Wednesday, September 23, 2009

சுவற்றில் அறைந்த ஆணி

ஒரு அழகிய சிற்றூரில் அதிக பாசம் கொண்ட தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தனர். தன் மகளுக்கு அதிகமாக கோபம் வருவதையும், அதனால் அவள் செய்யும் தவறுகளையும் கண்டு மனவேதனை கொண்ட தந்தை இந்த காரியங்களை தன் மகளுக்கு எப்படி சொல்வதென யோசித்தார்.

ஒரு நாள் தன் மகள் கோபம் கொண்ட நிலையில் அவர் அவள் கையில் ஒரு ஆணியை கொடுத்து தன் வீட்டின் பின் புறம் உள்ள சுவற்றில் அடிக்குமாறு கூறினார். இதே போல அவள் கோபப்படும் ஒவ்வொரு முறையும் இப்படி செய்ய சொல்லி கொஞ்சம் ஆணிகளை அவள் கைகளில் கொடுத்தார். முதலில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என இருந்தது; கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின்னர் அவள் மிக சாந்தமானால். அதன் பின் தன் தந்தையிடம் வந்து இப்பொது எனக்கு கோபம் வருவதில்லை அதே சமயம் நீங்கள் கொடுத்த ஆணிகளும் தீர்ந்தது என கூறினால்.

உடனே தந்தை, இனி நாளுக்கு ஒன்றாக அந்த ஆணிகளை பிடுங்கிவிடு என கூறினார். அவளும் அவ்வாறே செய்து முடித்தால்.

இவைகள் முடிந்த பின் தந்தை அவளை கூடிக்கொண்டு அந்த சுவர் அருகே சென்று அதை அவளுக்கு காண்பித்தார். "அழகாகவும் மிகவும் பலமாகவும் இருந்த இந்த சுவர் உன் கோபத்தினால் இப்போது அழகையும் அதன் பெலத்தையும் இழந்துவிட்டது. இதே போல் தான் மனித உறவுகளும்; நமது கோபத்தில் செய்யும் சிறு தவறுகள் நாளடைவில் அந்த உறவின் அழகையும் நெருக்கத்தையும் அழித்துவிடுகிறது" என்றார்.

மகளில் கண்களில் கண்ணீர் மட்டுமே பதிலாக நின்றது....

(யாக்கோபு 1:20)