Friday, May 29, 2009

ராஜ வஸ்திரம்

முன்பொரு காலத்தில் ஒரு அழகிய நாட்டை ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் தேவனுக்கும், மனிதனுக்கும், தன் மனதிற்கும் அஞ்சாதவனாய் வாழ்ந்துவந்தான். இப்படி இருக்க ஒருநாள் அவன் தனக்கு வாரிசு பிறந்ததை கொண்டாட ஒரு நாளை நியமித்து, அந்த நாளில் தன் ராஜியத்தின் மக்கள் கேட்கும் யாவற்றையும் அவரவர்களுக்கு கொடுக்க நினைத்தான். அந்த நாளும் வந்தது, அனைவரும் தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுச்சென்றனர் . அந்த வேலை ஒரு மனிதன் ஒருவன் அவரிடத்தில் வந்து, எனக்கு மன்னர் அணிந்திருக்கும் ராஜவஸ்த்ரம் வேண்டும் என கேட்டான். அதை கேட்டு "இவன் தன் தகுதிக்கு மேல் கேட்கிறானே" என மன்னர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். ஆனாலும் ராஜா நியமித்த அந்த நாளில் அவனை தண்டிக்க மனதில்லாமல் அனுப்பிவிட்டார். அந்த மனிதனோ தினமும் மன்னரின் விசாரிப்பு நேரத்தில் முதல் ஆளாக வந்து, மன்னா எனது ஆசயை நிறைவேற்றுங்கள் என்று கேட்பதும்; அங்குள்ளவர்கள் அவனை வெளியில் அனுப்புவதும் வழக்கமான ஒரு செயலானது. இருப்பினும் அந்த மனிதன் தன் செயலை நிறுத்துவதாக இல்லை. யார் தடுத்தாலும் அவர்களையும் மீறி உள்ளே நுழைந்து விடுவான்; சில நேரங்களில் உள்ளே நுழைய முடியாவிட்டாலும் வாசலில் நின்றபடியே தன் குரலை உயார்த்தி "அரசே எனக்கு ராஜவஸ்த்ரம் அணிய ஆசை, அதை நிறைவேற்றுங்கள்" என்று மன்னர் காதுக்கு எட்டும்படி வேண்டுவான். யாருக்கும் அஞ்சாத அந்த அரசர் ஒருசமயத்தில் இவன் வருகிறான் என்றாலே பயந்து ஒதுங்கும் நிலை வந்தது. இந்த செயல் தொடரவே, இவன் தொல்லை தாங்கமுடியாத அரசர் ஒருநாள் அந்த மனிதனை உள்ளே அழைத்து அவனுக்கு ஒரு புதிய ராஜவச்திரத்தையும், அதனோடே கூட பொன்னையும் வெள்ளியும் கொடுத்தனுப்பினார்.

சாதாரண மனிதனே ஒரு விஷயத்தை நாம் விடாமல் கேட்டால் செய்கிறான் என்றால், தேவன் செய்யாதிருப்பாரோ?

எந்த ஒரு செயலையும், தோல்வியை பார்க்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.

(லூக்கா 18:1-5)

Tuesday, May 26, 2009

சொந்த குமாரன்

வாலிப சகோதரர் ஒருவருக்கும் தேவ ஊழியருக்கும் இடையே நடந்த உரையாடல்.

வாலிபன்: தேவன்மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கையோ, பாசமோ இல்லை. நேரம் கிடைத்தால், எதாவது வேண்டுமென்றால் ஆலயம் செல்வேன். அப்படி இருக்கும்போதே நான் எது வேண்டினாலும் தேவன் தருகிறார். இப்படி இருக்க ஏன் நண்பன் ஒருவன் எப்போதும் தேவனை பற்றியே பேசுகிறான், தவறாமல் ஆலயம் செல்கிறான், தேவனுக்கு பயந்து நடக்கிறான். ஆனால் பலன்..?? அவனை விட எனக்கு நான் நினைத்த எல்லாமே கிடைக்குதே...!!!

தேவ ஊழியர்: நீ சொன்னது சரிதான். ஆனால் நான் ஒரு நிகழ்வை சொல்கிறேன் அதன் பிறகு உன் முடிவை சொல்.

பணக்கார தந்தை ஒருவர் இருந்தார், அவருக்கு ஒரே மகன். ஒருநாள் அதிகாலையில் அவர் வீட்டின் வாசலில் ஒரு யாசகம் கேட்பவர் வந்து ஐயா ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று கேட்டான். உடனே அவர் சென்று கொஞ்சம் உணவும், பத்து ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். வீட்டின் உள்ளே நுழையும் நேரத்தில் தன் மகன் படுக்கையில் இருந்துகொண்டே தாயை நோக்கி இரவு வாங்கிவந்த தின்பண்டத்தை கேட்பதை கவனித்தார். உடனே உள்ளே சென்று தன் மகனிடம் நீ எழுந்து பல் துலக்கி உன்னை சுத்தம் செய்தால் மட்டுமே அவைகள் உனக்கு கிடைக்கும் என்று கூறினார். அந்த மகனும் அவ்வாறே செய்து அதை பெற்றுகொண்டான்.

தர்மம் கேட்டு வந்தவன் குளித்தானா, சுத்தமாக உள்ளன என்றெல்லாம் பார்க்கவில்லை ஆனால் அதே தன் சொந்த குமாரன் என்று வரும்போது இவைகளை தந்தை எதிர்பார்ப்பது நியாயம் அல்லவா...?

தர்மம் கேட்டு வந்தவன், தனக்கு வேண்டுமென்று கேட்டது கிடைத்தது (பத்து ரூபாயும், உன்ன ஒரு வேலைக்கான உணவும்). ஆனால் சொந்த குமாரனுக்கோ தந்தைக்கு உள்ள முழு உரிமை, ஆஸ்தி, அவருக்குரிய மற்ற எல்லாமே தானாகவே கிடைக்கும் அல்லவா..???

இப்பொது உனக்கும் உன் நண்பனுக்கும் உள்ள வித்யாசம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வாலிபன்: மௌனம்...!!!!

(உபாகமம் 2:13)

Monday, May 25, 2009

கண் தானம்

2008- வெளிவந்த ஒரு அறிக்கையின்படி நமது இந்தியாவில் மட்டும் 5 முதல் 10 லட்சம் பார்வையற்ற மக்கள் உள்ளனர். இதில் 90 சதவிகிதம் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக 60 சதவிகிதம் 12 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலில் இருபதாயிரம் பேர் கூடுதலாக இணைகின்றனர். கண்களின் தேவை ஏறக்குறைய பத்து லட்சமாக இருக்கும் இந்த நிலையில், கண் தானம் செய்பவர்களது எண்ணிகயோ 22,000-ஐ தாண்டவில்லை.

இறந்த பிறகு மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்தால் நாம் மரித்தாலும் வாழலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும்.

யார் கண் தானம் செய்யலாம்:

கண் தானம் செய்ய வயதோ, மதமோ, இனமோ தடையில்லை. ஆண் / பெண் யார்வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம்.

கண் பார்வை குன்றியவர்கள், கண்ணாடி அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை வியாதிகரர்கள், ரெத்த கொதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.

(தகுதியான கண்கள் பிறருக்கு பொறுத்தப்படும், மற்றவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்)


எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர், B மற்றும் C வைரசால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்தோர், ரெத்த புற்று நோய் உள்ளோர், காலரா நோயால் அல்லது வைரஸ் பரவலால் மரித்தோர் மற்றும் இறப்பிற்கான காரணம் தெரியாதோர் கண் தானம் செய்ய தகுதி இல்லாதவர்கள் ஆவர்.


கண் தானம் செய்ய விரும்புவோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:

1. அருகில் உள்ள மருத்துவமனையில் பதிவு செய்யவேண்டும்
2. விலாசம் மாறினால் அதை அறிவிக்க வேண்டும்
3. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை எடுக்க வேண்டும் எனவே உறவினர்களுக்கு தெரிவித்து வைப்பது நல்லது
4. ஓட்டுனர் உரிமம் அல்லது ஏதேனும் முக்கிய (எப்போதும் கையில் உள்ள) ஆவணத்தில் கண்தான பதிவு பற்றிய குறிப்பு இருப்பது நல்லது

மனிதநேயம் இருந்தால் மரித்தாலும் வாழலாம்
கண் தானம் செய்வோம்; இருளான வாழ்வில் ஒளியேற்றுவோம்.


மேலும் விவரங்களுக்கு...
http://www.aravind.org/tamilweb/default.
htm
http://www.sankaranethralaya.org/about_history.
htm

(ரோமர் 16:2)

Friday, May 22, 2009

அனுபவக்கல்வி

ஞானமுள்ள ஒரு மனிதன், சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை துவங்கி அதை லாபகரமாகவும் நடத்திவந்தார். ஒரு காலகட்டத்தில் தன் தயாரிப்புகளை பற்றி சில புகார்கள் எழும்ப நிறுவனத்தின் லாபம் கணிசமான அளவு குறைந்தது. புகார் என்னவென்றால், இந்த நிறுவனத்தில் இருந்து வரும் பல சோப்பு பெட்டிகள் காலியாகவே உள்ளது என்பதுதான். இதை அறிந்த அந்த மனிதன் தன் நிறுவன அதிகாரிகள், ஆலோசனை குழுக்கள் எல்லோரையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தினர். அதன் முடிவாக, காலி சோப்பு பெட்டிகளை பிரித்தெடுக்க இரண்டு கோடியில் ஒரு நவீன எந்திரம் வாங்க முடிவெடுக்கப்பட்டது. அந்த எந்திரம் வந்தால் அதை எங்கு அமைப்பது என்று பார்பதற்காக அந்த நிறுவனரும் அவரது குழுவும் அந்த தொழிற்சாலைக்கு சென்றது. அவர்கள் அங்கே குழிமியத்தை பார்த்த ஒரு தொழிலாளி அங்கே சென்று அவர்கள் வந்ததற்கான காரணத்தை அறிந்து அவன் நேராக சோப்பு அட்டையில் அடைக்கப்பட்டு வெளியேவரும் கன்வேயர் பெல்ட் அருகே சென்றான், சக தொழிலாளர்களும் முதலாளியும் அவன் என்ன செய்ய போகிறான் என்று குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்தனர். அங்கே சென்ற அவன், அங்கிருந்த ஒரு மின் விசிறியை (Fan) கன்வேயர் பெல்ட் பக்கமாக திருப்பி வைத்தான். அப்போது அங்கே இருந்த காலி அட்டை பெட்டிகள் தானாக பறந்து கீழே விழுந்தன, நல்ல பெட்டிகள் மட்டும் வெளியே வந்தன. இதை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இரண்டு கோடிக்கு ரூபாய் செலவை வெறும் ஐந்நூறு ரூபாயில் முடித்துவிட்டார்.


ஏட்டு கல்வி மட்டுமே அறிவை தந்துவிட முடியாது, அனுபவக்கல்வியும் தேவை.

Wednesday, May 20, 2009

உடைந்த பானை


ஒரு அழஅகிய கிராமத்தில் ஏழை பெண் ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அவளிடம் அழகான இரண்டு பானைகள் இருந்தன, அவள் வீட்டில் இருந்து தண்ணீர் துறை சற்றே தூரமாக இருந்ததால் அவள் தினமும் அங்கு சென்று அவளது இரண்டு பானையிலும் தண்ணீர் கொண்டுவருவது வழக்கம். இவ்வாறு அவள் செய்கையில் ஒரு நாள் அவளது இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது; அதனால் அந்த பானையில் இருந்து தண்ணீர் சிந்துவதும் வழக்கமானது. அதனால் அவள் இரண்டு குடம் தண்ணீர் கொண்டுவந்தாலும், வீட்டில் சேர்ப்பது ஒன்றரை குடம் மட்டுமே; அந்த ஓட்டை குடத்தில் இருந்து பாதி தண்ணீர் சிந்திவிடும். இப்படியே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

அந்த ஓட்டை குடம், தான் குடம் நிறைய நீரை சுமப்பதற்காக செய்யபட்டளும் நம்மால் அரை குடம் மட்டுமே சுமக்க முடிகிறதே என்ற வருத்ததுடனே இருந்துவந்தது. அதே சமயம் அந்த நல்ல பானை, தான் சுமக்கும் முழு குட தண்ணீருக்காக பெருமையுடன் இருந்தது.

ஒரு நாள் அந்த ஓட்டை பானை தன் எஜமாட்டியான அந்த பெண்ணை பார்த்து, "நான் குடம் நிறைய தண்ணீர் சுமப்பேன் என்ற நம்பிக்கையில் நீங்கள் என்னை வாங்கினீர்கள். ஆனால் என்னாலோ அரை குடம் மட்டுமே சுமக்கமுடிவதர்கக வருந்துகிறேன்" என்றது.

அதை கேட்ட அந்த பெண், "நீ உடைந்திருக்கும் நிலையிலும் நான் உன்னை இரண்டு வருடமாக சுமக்கிறேன் என்றால் அதில் நிச்சயம் ஒரு காரணம் உள்ளது. நீ கவனித்தாயா எனபது எனக்கு தெரியாது, ஆனால் உடைந்த உன்னிலிருந்து நீர் கசிய தொடங்கின நாள்முதல் நாம் தண்ணீர் சுமந்துவரும் பாதயில் நீ இருக்கும் பக்கத்தில் நிறைய பூச்செடிகளும், காய் செடிகளும் நட்டுவைத்தேன் அவைகளுக்கு உன் நீர் ஆகாரமானதல் அவைகள் தன் பலனை கொடுத்தன. அதேசமயம் நல்ல பானயுள்ள பக்கத்திலோ வெறுமையை இருக்கிறது. நீ எனக்கு அரை குடம் நீர் சுமந்தாலும் உன்னால் நான் பெற்ற பிற நன்மைகள் அதிகம்."


நாம் நமது குறைகளை நினைக்கும் வேலையில், தேவன் நமது நிறைகளை நினைத்து நமை ஆசிர்வதிக்கிறார் என்பதை மறக்கக்கூடாது.

(1 கொரிந்தியர் 15:43)

Friday, May 15, 2009

தந்தையின் பரிசு

ஒரு பட்டணத்தில் நல்ல ஞானமுள்ள ஒரு வாலிபன் இருந்தான். அவன் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்துவந்தான் . அவனது நெடுநாள் ஆசையாக இருந்தது, தன் சிறு வயதில் கண்ட பந்தய கார். அதை வாங்கித்தரும்படி அவன் பலமுறை தன் தகப்பனிடம் கேட்டுள்ளான், ஆனால் அதற்கு அவனுக்கு கிடைத்த ஒரே பதில் "நீ உன் படிப்பை சிறப்பாக முடித்து பட்டம் பெறும் நாளில் உனக்கு கிடைக்கும்" என்பதுதான். அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது, அந்த வாலிபன் தான் பெற்ற பட்டத்துடன் தந்தையை பார்க்க ஓடி வந்து தன் பட்டதை காட்டி அவரின் பரிசுக்காக காத்திருந்தான். காத்திருந்த மகனின் கையில் தந்தை ஒரு விவிலியத்தை (பைபிள்) கொடுத்தார். அதை கண்டதும் ஆத்திரம் அடைந்த மகன், அதை அங்கேயே வைத்துவிட்டு தன் தந்தத்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடின, ஆனால் அவன் அதன் பின் தன் தந்தையை பர்கமலே வாழ்ந்துவந்தான். ஒரு நாள் தன் தந்தை இறந்துவிட்டதாக தகவல் வரவே, பதறிய வண்ணமாய் அவரை காண சென்றான். அவருக்கான இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த நிலையில், தன் தந்தையின் அறையை சுத்தம் செய்ய நுழைந்தான். அங்கே அவன் கண்டது, பலவருடங்களுக்கு முன் தான் வைத்துச்சென்ற அந்த பைபிள்.

அதை எடுத்து மெல்ல ஒவ்வொரு பக்கமாய் திருப்பினான், அப்பொழுது அதன் உரையில் இருந்து ஒரு "பரிசு அட்டை" விழுந்தது. அந்த அட்டையில் தான் வாங்க நினைத்த கார் நிறுவனத்தின் முகவரியும், முழுவதுமாக பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதும், அது அவன் பட்டம் பெற்ற தேதியை கொண்டதாகவும் இருந்தது. அதை கண்ட மகன் கதறி அழுதான்.

இப்படி தான் பல வேலையில், நம் எதிர்பார்க்கும்படி தான் தெய்வம் தரும் என்று நினைப்போம். அப்படி நினைத்து நமக்கு வரும் ஆசிர்வாதங்களை பலமுறை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.

என் (தேவன்) நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல........உங்கள் நினைவுகளை பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:8,9)

Tuesday, May 5, 2009

Monday, May 4, 2009

ஞானமே உத்தமம்

முன்பொரு காலத்தில் ஒரு சிறிய பட்டணம் இருந்தது, அதின் மக்கள் மிகவும் செழிப்புடனும், சந்தூஷமாகவும் வாழ்ந்துவந்தார்கள். இதை அறிந்த மன்னன் ஒருவன் அந்த பட்டணத்தின் மீது படையெடுத்து வந்தான், ஆனால் அவனால் அந்த பட்டணத்து மக்களை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதால் அந்த பட்டணத்தை சுற்றி கொத்தளம் அமைத்து அந்த மக்கள் வெளியில் வரவோ - வேறு எவரும் உள்ளே சென்று அவர்களுக்கு உதவவோ முடியாத நிலயை ஏற்படுத்தினான். உள்ளே இருந்த மக்கள் உணவுக்கு கூட மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. அந்த பட்டணத்து மன்னனுக்கு என செய்வது என்றே தெரியாமல் கலங்கி போய் இருந்தான். மக்களும் மிகவும் வருடத்தில் இருந்தார்கள்; அந்த நிலையில் ஒரு ஏழை விவசாயி ஒருவன் அந்த மன்னனிடம் சென்று, முன்பொரு காலத்தில் நமது நகரத்து அகழிக்கு தண்ணீர் கொண்டுவர ஒரு ரகசிய பாதை அமைக்க பட்டது, அது இவ்வழியாக இந்த இடத்தில் அமைக்கப்பட்டது என்று அறிவித்தான். இதை கேட்ட மன்னன் தன் படை தளபதியை அழைத்து அவன் தலைமையில் ஒரு படையை அந்த வழியாக வெளியே அனுப்பி, எதிர் நாட்டு மன்னன் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களை தாக்கி அவர்களை வென்று மக்களை காப்பற்றினார்கள்.

இவை எல்லாம் முடிந்த பின்னர் இந்த செயலை சாதுர்யமாக செய்த அந்த தளபதிக்கு தக்க சன்மானமும், பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார். அந்த ஏழையின் ஞானம் அங்கே அசட்டை பண்ணப்பட்டது, ஆனால் அந்த ஏழை அதை எதிர்பார்க்காமல், மக்கள் பிழைத்தது தான் முக்கியம். அது நடந்து என்று சந்தோஷப்பட்டு தன் வேலையே தொடர சென்றுவிட்டான்.

ஆகையால் ஏழையின் வார்த்தை அசட்டைபண்ணப்பட்டு , அவன் வார்த்தை கேட்கபடாமல் போனாலும்; பெலத்தை பார்க்கிலும் ஞானமே உத்தமம். (பிரசங்கி-9:16)