Friday, May 15, 2009

தந்தையின் பரிசு

ஒரு பட்டணத்தில் நல்ல ஞானமுள்ள ஒரு வாலிபன் இருந்தான். அவன் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்துவந்தான் . அவனது நெடுநாள் ஆசையாக இருந்தது, தன் சிறு வயதில் கண்ட பந்தய கார். அதை வாங்கித்தரும்படி அவன் பலமுறை தன் தகப்பனிடம் கேட்டுள்ளான், ஆனால் அதற்கு அவனுக்கு கிடைத்த ஒரே பதில் "நீ உன் படிப்பை சிறப்பாக முடித்து பட்டம் பெறும் நாளில் உனக்கு கிடைக்கும்" என்பதுதான். அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது, அந்த வாலிபன் தான் பெற்ற பட்டத்துடன் தந்தையை பார்க்க ஓடி வந்து தன் பட்டதை காட்டி அவரின் பரிசுக்காக காத்திருந்தான். காத்திருந்த மகனின் கையில் தந்தை ஒரு விவிலியத்தை (பைபிள்) கொடுத்தார். அதை கண்டதும் ஆத்திரம் அடைந்த மகன், அதை அங்கேயே வைத்துவிட்டு தன் தந்தத்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடின, ஆனால் அவன் அதன் பின் தன் தந்தையை பர்கமலே வாழ்ந்துவந்தான். ஒரு நாள் தன் தந்தை இறந்துவிட்டதாக தகவல் வரவே, பதறிய வண்ணமாய் அவரை காண சென்றான். அவருக்கான இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த நிலையில், தன் தந்தையின் அறையை சுத்தம் செய்ய நுழைந்தான். அங்கே அவன் கண்டது, பலவருடங்களுக்கு முன் தான் வைத்துச்சென்ற அந்த பைபிள்.

அதை எடுத்து மெல்ல ஒவ்வொரு பக்கமாய் திருப்பினான், அப்பொழுது அதன் உரையில் இருந்து ஒரு "பரிசு அட்டை" விழுந்தது. அந்த அட்டையில் தான் வாங்க நினைத்த கார் நிறுவனத்தின் முகவரியும், முழுவதுமாக பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதும், அது அவன் பட்டம் பெற்ற தேதியை கொண்டதாகவும் இருந்தது. அதை கண்ட மகன் கதறி அழுதான்.

இப்படி தான் பல வேலையில், நம் எதிர்பார்க்கும்படி தான் தெய்வம் தரும் என்று நினைப்போம். அப்படி நினைத்து நமக்கு வரும் ஆசிர்வாதங்களை பலமுறை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.

என் (தேவன்) நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல........உங்கள் நினைவுகளை பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:8,9)

No comments: