Monday, May 4, 2009

ஞானமே உத்தமம்

முன்பொரு காலத்தில் ஒரு சிறிய பட்டணம் இருந்தது, அதின் மக்கள் மிகவும் செழிப்புடனும், சந்தூஷமாகவும் வாழ்ந்துவந்தார்கள். இதை அறிந்த மன்னன் ஒருவன் அந்த பட்டணத்தின் மீது படையெடுத்து வந்தான், ஆனால் அவனால் அந்த பட்டணத்து மக்களை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதால் அந்த பட்டணத்தை சுற்றி கொத்தளம் அமைத்து அந்த மக்கள் வெளியில் வரவோ - வேறு எவரும் உள்ளே சென்று அவர்களுக்கு உதவவோ முடியாத நிலயை ஏற்படுத்தினான். உள்ளே இருந்த மக்கள் உணவுக்கு கூட மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. அந்த பட்டணத்து மன்னனுக்கு என செய்வது என்றே தெரியாமல் கலங்கி போய் இருந்தான். மக்களும் மிகவும் வருடத்தில் இருந்தார்கள்; அந்த நிலையில் ஒரு ஏழை விவசாயி ஒருவன் அந்த மன்னனிடம் சென்று, முன்பொரு காலத்தில் நமது நகரத்து அகழிக்கு தண்ணீர் கொண்டுவர ஒரு ரகசிய பாதை அமைக்க பட்டது, அது இவ்வழியாக இந்த இடத்தில் அமைக்கப்பட்டது என்று அறிவித்தான். இதை கேட்ட மன்னன் தன் படை தளபதியை அழைத்து அவன் தலைமையில் ஒரு படையை அந்த வழியாக வெளியே அனுப்பி, எதிர் நாட்டு மன்னன் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களை தாக்கி அவர்களை வென்று மக்களை காப்பற்றினார்கள்.

இவை எல்லாம் முடிந்த பின்னர் இந்த செயலை சாதுர்யமாக செய்த அந்த தளபதிக்கு தக்க சன்மானமும், பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார். அந்த ஏழையின் ஞானம் அங்கே அசட்டை பண்ணப்பட்டது, ஆனால் அந்த ஏழை அதை எதிர்பார்க்காமல், மக்கள் பிழைத்தது தான் முக்கியம். அது நடந்து என்று சந்தோஷப்பட்டு தன் வேலையே தொடர சென்றுவிட்டான்.

ஆகையால் ஏழையின் வார்த்தை அசட்டைபண்ணப்பட்டு , அவன் வார்த்தை கேட்கபடாமல் போனாலும்; பெலத்தை பார்க்கிலும் ஞானமே உத்தமம். (பிரசங்கி-9:16)

No comments: