Wednesday, July 6, 2011

ஆட்டம் முடிந்தது..

நியூயார்க் நகரில் உள்ள ஒரு அருங்க்காட்ச்சியகத்தில் மக்கள் கூட்டம் திரளாக வருவது வழக்கம். அவ்வாறு வருகையில் ஒருநாள் அந்த அருங்க்காட்ச்சியகத்தின் முகப்பில் ஒரு ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு சதுரங்க ஆட்டத்தில் மனிதனும் சாத்தானும் ஆடுவது போலவும், சாத்தான் அனேக காய்களுடன் மெத்தனமான சிரிப்புடன் இருக்க, மனிதன் ஒருசில சொற்ப காய்களுடன் கவலையோடு இருப்பது போலவும் இருந்தது. அதன் அடி
யில் "ஆட்டம் முடிந்தது (தி கேம் ஈஸ் ஓவர்)" என்று அதன் ஓவியர் எழுதியிருந்தார்.

அதை பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியமும் பயமும் கலந்த ஒரு உணர்வுடன் மற்ற ஓவியங்களை காண புறப்பட்டு, அருங்க்காட்ச்சியகம் முழுவதும் சுற்றி முடித்து திரும்பும் வேலையில், அங்கே ஒரு மனிதன் அந்த படத்தை வெகு நேரமாக பார்ப்பதை கண்டு அவனிடம் சென்றனர். அங்கு சென்றவர்கள் அவனை நோக்கி "படமும் தெளிவாய் உள்ளது, அதன் முடிவும் படத்திலேயே எழுதப்பட்டுவிட்டது. பின்னர் நீ எதை தான் இவ்வளவு நேரமாக பார்க்கிறாய்" என்று கேட்டனர்.



அதற்க்கு அவன், "நீங்கள் ஓவியத்தையும் அதன் கருத்தையும் காண்கிறீர்கள்; ஆனால் நானோ ஒரு சதுரங்க வீரன் என்பதால் அந்த சதுரங்க பலகையை காண்கிறேன். ஆட்டம் இன்னும் முடியவில்லை, இந்த நிலையில் என்னிடம் கொடுங்கள் இவனை நான் வெற்றிபெற வைக்கிறேன்" என்றான்.

இப்படி தான் பலநேரம் நமது வாழ்க்கையும் உள்ளது. சூழ்நிலைகளை கண்டு "எல்லாம் முடிந்தது" என்று நாம் நினைக்கிறோம். நாம் முடிந்தது என்று சொல்லும் அந்த வேலையில் நாம் சகலத்தையும் மாற்றவல்ல தேவனிடத்தில் நம்மை கொடுத்தோமானால் அவர் சொல்லும் வார்த்தை, "இப்போது தான் எனது வேலை துவங்குகிறது".