Tuesday, December 30, 2014

நீங்களே சொல்லுங்க! என் பதில் சரியா? இல்லையா??

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்? அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! 

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்.. வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்.. எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்.. மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்.. உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி.. எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

இப்போ சொல்லுங்க! பதில் சரியா? இல்லையா??

Thursday, December 4, 2014

திட்டமிட்ட வாழ்கை இனிக்கும்???

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,
5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க.


ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.

அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு.

அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.

இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
-
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்!!
(நெட்டில் சுட்டது!!!)