Monday, June 29, 2009

நீ விசுவாசித்தால்....

இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க வீரர் சென்ற கப்பல் ஒன்று எதிரிகளால் தகர்க்கப்பட்டது. அந்தசமயம் அவர் அருகில் இருந்த ஒரு குட்டி தீவிற்குள் நீந்தி கரையேறினார். ஆனால் அவர் இருக்கும் திசை நோக்கி ஒரு எதிரி நாட்டு கப்பல் வருவதை கண்டார், அதில் உள்ள ஒரு வீரன் தன்னை கண்டுவிட்டத்தையும் அவர் அறிந்தார். இந்த சமயத்தில் அவர்கள் கையில் சிக்கினால் நிச்சயம் மரணம்.

இந்த நிலையில், அவர் தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து, பின்னர் அங்கே இருந்த ஒரு குகைக்குள் சென்று மறைந்துக்கொண்டார். அவர் குகை பகுதிக்குள் செல்வதை கண்ட அந்த வீரர்கள் ஒவ்வொரு குகையாக சென்று பார்த்தனர். அவர்கள் இந்த மனிதன் இருக்கும் குகை அருகே வர வர இவருக்கு பயம் அதிகமானது. அந்த சமயம் மீண்டும் தேவனை நோக்கி மன்றாடினார். அப்போது அவர் அருகே ஒரு சிலந்தி வருவதை அவர் கண்டார், அந்த சிலந்தி அவர் இருந்த குகை வாயிலில் வலையை பின்னத்தொடங்கியது. இதை கண்ட அவர், "இறைவா! இந்த நேரத்தில் எனக்கு தேவை பலமான ஒரு சுவர்; ஆனால் இங்கே இருப்பதோ சிலந்தி வலை." என்று வருந்தினார். அந்த சமயத்துக்குள் அந்த சிலந்தி தன் முழு வலையையும் பின்னி முடித்து; அதே சமயம் அந்த வீரர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கே வந்த அந்த வீரர்கள், குகை வாசலில் சிலந்தி வலை உள்ளது, எனவே யாரும் உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்று அங்கிருந்து சென்றனர். அந்த மனிதரும் உயிர் பிழைத்தார்.

தேவன் ஒருவனை காக்க, மதில்கள் தேவையில்லை; சிலந்தியின் வலை கூட போதும்.
(
ஏசாயா 49:15,16)


நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்.
(
யோவான் 11:40)


Friday, June 19, 2009

தேவனின் கடிதம்

அழகிய சிற்றூர், அதிகாலை நேரம் "ரூத்" என்ற பெண்மணி வீட்டின் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழுந்த சத்தம் கேட்டது. உடனே அவள் அந்த கடிதத்தை எடுக்க சென்றால்; தபால்காரன் வந்து போன அறிகுறியும் இல்லை, "அனுப்புனர்" முகவரியும் இல்லை, தபால் தலையும் இல்லை.

அந்த கடிதத்தில்,
"இன்று மாலை நான் உங்கள் வீட்டுக்கு உணவருந்த வருகிறேன். அன்புடன், - கடவுள்"

என்று எழுதியிருப்பதை கண்டு அவளுக்கு மிகவும் ஆச்சர்யம். கடவுள் வருகிறார் என்றல் எதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்று தன் சமயலறைக்கு சென்றால். ஆனால் அவளது வறுமை அங்கேயும் தெரிந்தது. என்ன செய்வது என்று அறியாத அவள், தன் பண்ப்பியை நோக்கினால். அதில் சில்லரையாக 50 ரூபாய் இருந்தது, உடனே அதைக்கொண்டு சில ரொட்டி துண்டுகளும் கொஞ்சம் கறியும் வாங்கி உணவை தயார் செய்துகொண்டிருந்தால்.

அப்போது "கருணை உள்ளம் கொண்ட தாயே, வெளியே வந்து எங்களுக்கு உதவவேண்டும்" என்று ஒரு குரல். அவள் சென்று பார்த்தால், அங்கே மிகவும் வயதுசென்ற ஒரு பெரியவர் தன் மனைவியுடன் நின்றார். ரூத்தை கண்ட அவர், "தாயே நாங்கள் மிகவும் பசியாய் இருக்கிறோம். உங்களால் முடிந்தால் எங்களுக்கு எதாவது உதவுங்கள்" என்று சொன்னார். அதற்க்கு அவள், "ஐயா நானும் ஒன்றும் பெரிய வசதி கொண்டவள் இல்லை. என்னிடம் கொஞ்சம் ரொட்டிகள் மட்டுமே உள்ளது, ஆனாலும் இன்று இரவு ஒரு முக்கியமான விருந்தாளி வருகிறார்" என்றல். அதை கேட்ட அவர், சரி அம்மா பரவாயில்லை என்று கூறி அங்கிருந்து தளர்ந்த நடையுடன் புறப்பட்டார்.

இருந்தும் மனது கேட்காத ரூத், அவர்களை நோக்கி "ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள், என் விருந்தாளியிடம் நான் எதாவது சொல்லி சமாளித்துகொள்கிறேன். தேவையுடைய நீங்கள் இந்த உணவை கொண்டுசெல்லுங்கள்" என்று கூறி, தான் தயார் செய்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினாள். அப்போது அந்த பெரியவரின் மனைவி குளிரினால் வாடிகொண்டிருப்பதை கண்ட அவள், என்னிடம் இன்னொரு மேலாடை உள்ளது நீங்கள் இதை கொண்டுசெல்லுங்கள் என்று தான் அணிந்திருந்ததை கழற்றி அவர்களிடம் கொடுத்தால். அவர்களும் சந்தோசமாக பெற்றுக்கொண்டு சென்றனர்.

பின்னர் அவள் தனியாக அமர்ந்து தேவன் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள், அப்பொழுது மறுபடியும் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் தபால்காரன் இருமுறை வர மாட்டான், அதுவும் இந்த இரவில் நிச்சயம் வரமாட்டன் என அறிந்தும் அவள் சென்று பார்த்தால். மீண்டும் அதேவிதமான கடிதம்,

"நீ கொடுத்த இரவு விருந்துக்கு மிக்க நன்றி. மேலும் நீ கொடுத்த ஆடை மிகவும் நன்றாக இருந்தது, அதற்கும் நன்றி. அன்புடன், -கடவுள்"

"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்"
(மத்தேயு 25:40,45)

Thursday, June 11, 2009

நீ வாழ....!!!


விவசாய திருவிழாவில்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக "சிறந்த விவசாயி" பரிசுபெறும் அந்த விவசாயிக்கும் பத்திரிக்கயாளருக்கும் நடந்த உரையாடல்.

பத்: நீங்கள் பெற்ற இந்த விருதைப்பற்றி சொல்லமுடியுமா..?

விவ: தொடர்ந்து ஐந்தவதுமுறையாக இதை பெறுகிறேன். மிக்க மகிழ்ச்சி. அதிக மகசூல் மற்றும் சிறந்த தரமான சோள விளைச்சலுக்காக இதை பெறுகிறேன்.

பத்: இந்த தரமான விளைச்சல் பெற்றதற்க்கான ரகசியத்தை கூறமுடியுமா..?

விவ: இதில் எந்த ரகசியமும் இல்லை. நல்ல தரமான விதை, முறையான விவசாயம். இதுவே இந்த aபரிசுக்கு காரணம்.

பத்: தரமான விதையென்று கூறுகிறீர்கள் ஆனால் அதை உங்கள் பக்கத்து நிலகாரர்களுடனும் நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள். அது உங்களுக்கு போட்டியை ஏற்படுத்தாதா..?

விவ: நிச்சயமாக போட்டி வரும். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் அறியவேண்டும். சோள விளைச்சலின் காலத்தில் சூறைக்காற்று அடிப்பதும் அப்போது அது சோள செடியின் விந்தைகொண்டுவந்து அருகே உள்ள நிலங்களில் தெளிப்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி வந்து விழும் விந்து தரமானதாய் இருந்தால் விளைச்சல் தெளிவாக இருக்கும், இல்லையென்றால் அது நமது விளைச்சலையும் தரத்தையும் சேர்த்து கெடுக்கும். எனவே என் தரமான விதையை கொண்டு அவர்களும் வாழ்கிறார்கள், அதனால் நானும் வாழ்கிறேன்.

நீ வாழ பிறரை கெடுக்காதே என்பதைவிட, நீ வாழ பிறரையும் வாழவை என்பதே சரி.

Monday, June 8, 2009

பழைய காலனி

ஓர் அழகிய கிராமத்தின் வயல்வெளி வழியாக ஒரு ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டே நடந்துசென்றர்கள். அப்போது வழியில் ஒரு ஜோடி பழைய காலணியும் அதன் அருகே ஒரு பழைய ஆடையும் இருந்தது. அதை கண்ட அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்க, தூரத்தில் ஒரு பெரியவர் வயலில் வேலை செய்வதை கண்டு அது அவருடையது தான் என உறுதி செய்தனர்.

உடனே அந்த மாணவன், ஆசிரியரை நோக்கி; "இந்த பழைய காலனியை வைத்து நம் ஒரு வேடிக்கை பார்க்கலாமா?. இதை எடுத்து மறைத்துவிட்டு நாமும் அந்த புதரின் அருகே மறைந்திருப்போம். இந்த பழைய காலனிக்காக அந்த பெரியவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்." என்றான்.

அதை கேட்ட அந்த ஆசிரியர்,

"தம்பி உன் குறும்பு சரியானதுதான், ஆனால் அதை அவருடைய வறுமையை வைத்து விளையாடாமல் உனது செல்வத்தை வைத்து விளையாடலாமே..!!

நீ சொன்னதுபோல அந்த காலனியை மறைத்துவைத்து விளையாடுவதற்கு பதிலாக, அந்த ஒவ்வொரு காலனியிலும் ஒரு காசை போட்டுவிட்டு நாம் மறைந்திருப்போம். அப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்." என்றார்.

அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு மறைந்திருந்தனர்.

அந்த பெரியவரும் தன் வேலையை முடித்து கரைக்கு வந்தார். அங்கே இருந்த தனது உடைகளை எடுத்துக்கொண்டு தன் காலனியை அணிய முயற்சித்தார். அப்பொழுது தன் காலில் ஏதோ ஒன்று உறுத்துவது போல உணர்ந்த அவர் தன் காலனியை பரிசோதித்தார். அதில் இருந்த காசை தன் கையில் எடுத்து, யாருடையதாக இருக்கும் என்று சுற்றிலும் பார்த்தார். ஒருவரும் இல்லாததால் அதை தன் சட்டை பையில் போட்டுக்கொண்டு, மற்றொரு செருப்பை அணிய சென்றார். அதிலும் ஒரு காசை கண்ட அவர், உடனே தன் கால்களால் முடக்கி வானத்துக்கு நேராக தன் முகத்தை உயார்த்தி,

"கடவுளே, உமக்கு மிகவும் நன்றி. உடல் நலம் குன்றி உதவ யாருமே இல்லாமல் மனைவியும், அடுத்த வேலை உணவுக்கு வழிதெரியாத என் பிள்ளைகளையும் போஷிக்க யாரென்றே தெரியாத ஒருவரால் எனக்கு நீர் கொடுத்த இந்த காசுக்காக நன்றி. இந்த காசை எனக்காக விட்டுச்சென்ற அவரையும், அவர் குடும்பத்தையும் நீர் ஆயிரம் மடங்கு ஆசிர்வதிக்கவேண்டும்" என்று வேண்டினார்.

இதை கண்ட அந்த மாணவன் கண்களில் கண்ணீர் வெள்ளம். உடனே அவன் அந்த ஆசிரியரை நோக்கி "இந்த நாளும், இந்த சம்பவமும், நீங்கள் கற்றுகொடுத்த இந்த பாடமும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. உங்களுக்கு என் மனப்பூர்வ நன்றி....!!!" என்று கூறினான்.


(யாக்கோபு 2:5-9)

Friday, June 5, 2009

சுயமதிப்பீடு

மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அறையில் பேசிக்கொண்டிருந்தார், அப்போது தன் பேச்சின் நடுவே ஒரு 500 ரூபாய் பணத்தை தன் கையில் உயர்த்தியபடி இந்த பணம் யாருக்கு வேண்டும் என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர், உடனே அந்த பேச்சாளர் அந்த பணத்தை தன் கைகளால் நன்றாக கசக்கி பின்னும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். அபோதும் அனைவரும் தன் கரங்களை உயர்த்தினர். பின்னர் அதை தரையில் போட்டு தன் காலால் கசக்கி அழுக்காக்கி எடுத்து திரும்பவும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். மீண்டும் கைகளின் உயரம் குறையவில்லை.

உடனே அந்த கூடத்தில் இருந்த ஒருவரை நோக்கி, "புதிய பணம் என்றாலும் வேண்டும் என்கிறீர், கசங்கினாலும் வேண்டும் என்கிறீர், அழுக்கனாலும் வேண்டும் என்கிறீர், ஏன் என்று கூறமுடியுமா?" என கேட்டார். அதற்க்கு அவன் "எந்த நிலையானாலும் அந்த பணத்தின் மதிப்பு மாறவில்லையே !" என்றன்.

அங்கே கூடியிருந்தவர்களை பார்த்து அந்த பேச்சாளர், "இதுபோல தான் மனித வாழ்வும். அழகான கசங்காத ரூபாய் நோட்டை போல தான் அனைவருமே தங்கள் வாழ்வை துவங்குகிறோம். ஆனால் வாழ்க்கையில ஏற்படும் சில சோதனைகளாலும், தோல்விகளாலும் நாம் நம்மையே குறைத்து மதிபிடுகிறோம். ரூபாய் நோட்டு புதிதானாலும், பழையதானாலும், கசங்கினாலும், அழுக்கனாலும் அதன் மதிப்பு குறைவதிள்ளயோ, அப்படித்தான் நாம் ஒவ்வொருவரின் மதிப்பும். இதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ அப்போதே அவன் வாழ்வில் வெற்றியாளனாக மாறிவிடுகிறான்" என்றார்.

நமைப்பற்றி பிறரைவிட நன்றாக அறிந்தவர் நாம் தான்.
நமை மதிப்பீடு செய்ய நாமே சிறந்தவர்.

நமது சுயமதிப்பீடும், நல்லோர் ஆலோசனையும் இருந்தால் நமது வெற்றியை யாராலும் மாற்றமுடியாது.


Tuesday, June 2, 2009

நம்பிக்கை

ஒரு ஊரில் ஒரு ஆமை தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவந்தது. ஒரு நாள் அது தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த ஆமை, தன் மனைவி மற்றும் மூன்று குட்டிகளுடன் பிரயாணத்தை தொடங்கியது. ஏறக்குறைய ஒரு ஆண்டு பிரயானதுக்குப்பின் அவைகள் ஒரு தோப்பை அடைந்தன. அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கவே, அங்கே இருந்து உணவருந்தலாம் என முடிவுசெய்து அதற்கு ஆயத்தமாயின. அப்போதுதான் உணவுக்கு உப்பு கொண்டுவராதது தெரிந்தது. இபொழுது அனைவரும் சென்றுவருவது தாமதம் ஆகும், எனவே கடைக்குட்டி ஆமையை மட்டும் வீட்டுக்கு அனுப்பி எடுத்துவர சொல்லலாம் என்று முடிவெடுத்தன. ஆனால் அவ்வளவு தூரம் தனியாக போகமுடியாது என அந்த குட்டி ஆமை சொல்லவே, நீண்ட நேரம் போராடி அந்த குட்டி ஆமையை சம்மதிக்கவைதனர். ஆனாலும் அந்த குட்டி "நான் திரும்ப வரும்வரை யாரும் சாப்பிட கூடாது" என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு புறப்பட்டது.

காலங்கள் போயின, ஏறக்குறைய ஒரு வருடம் தாண்டியது. இதுவரை அந்த குட்டி ஆமை வரவில்லை. இந்த நிலையில், மற்ற இரண்டு குட்டிகளும் பசியால் துடிக்க. உப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, நாங்கள் மட்டுமாவது சாப்பிடுகிறோம் என்று கூறின. ஆனால் தந்தை ஆமை சம்மதிக்காத நிலையில் இன்னும் சிலநாள் காத்திருந்தன. ஒரு நிலையில் அவைகளால் பொறுக்கமுடியாமல் உணவை திறந்து சாப்பிட தொடங்கின. உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னாலே இருந்து அந்த குட்டி ஆமை வெளியே வந்து, "நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் போகாமல், உங்களை கவனித்தேன்." என்று கூறியது.

இந்த குட்டி ஆமையின் செயலால், அதற்கும் பலனில்லை மற்றவர்களுக்கும் பயனில்லை.

எல்லோரையும் நம்பியவனும், யாரையும் நம்பாதவனும் நல்வாழ்வு வாழ தகுதியற்றவர்கள்.

"நம்பி வாழவேண்டும்; பிறர் நம்ப வாழவேண்டும்."

(ரோமர் 8:24,25)

Monday, June 1, 2009

யாருடைய பிரார்த்தனை கேட்கப்படும்

அமைதியாய் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல், திடீர் புயலினால் நிலைகுலைந்து உடைந்தது. அதில் பிரயாணம் செய்த மக்கள் நடு கடலில் தத்தளிக்க, ஒரு வாலிபனும், ஒரு பெரியவரும் மட்டும் ஒரு மரத்துண்டை பிடித்து ஒரு குட்டி தீவை அடைந்தனர். அங்கே செய்வதறியாது திகைத்த அவர்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மட்டுமே ஒரே வழி என்று உணர்ந்தனர்.

"நாம் இருவரும் தேவனை நோக்கி வேண்டுவோம், யாருடைய விண்ணப்பம் கேட்கபடுகிறது என்று பார்க்கலாம்" என்று அந்த வாலிபன் சொல்ல, அதை ஒப்புக்கொண்டவர்கலாய் இருவரும் ஆளுக்கொரு திசயாய் பிரிந்து சென்றனர்.

முதலில் அவர்கள் இருவரும் வேண்டியது தங்கள் உணவிற்காக, அந்த வாலிபன் கணிகளுடைய ஒரு மரத்தை கண்டு தன் பசியை போக்கிகொண்டான். ஆனால் அந்த பெரியவர் சென்ற திசையிலோ ஒன்றும் அகப்படவில்லை.

சில நாட்கள் சென்றபிறகு அந்த வாலிபன் தனிமயாக இருப்பதாக உணர்ந்து தனக்கொரு மனைவி வேண்டுமென வேண்டினான். அப்பொழுது கடலில் மிதந்து ஒரு பெண் அவனை தேடி வர, அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். பின்னர் தங்குவதற்கு வீடு, உணவு, உடை என தன் பட்டியலை நீட்டித்தான். ஆச்சர்யமாக மறுநாளில் அவை எல்லாமே அவனை தேடி வந்தது.

தீவு வாழ்க்கை சலித்துபோகவே அந்த வாலிபன் தன் மனைவியுடன் நாட்டுக்கு திரும்பநினைதான். எனவே இந்தமுறை தனக்கொரு கப்பல் வேண்டுமென வேண்டினான். மறுநாள் காலையில் தீவின் கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றதை கண்டு தன் மனைவியுடன் அதி ஏறி புறப்பட ஆயத்தமானான்.

அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தேவதூதன் அவனை நோக்கி, "உன்னோடு வந்த உன் உடனாளியை இந்த தீவில் விட்டு நீ மட்டும் எங்கே புறப்பட்டாய்?" என்று கேட்டான்.

அதற்க்கு அந்த வாலிபன், "இவை அனைத்தும் நான் தேவனிடம் வேண்டி கிடைத்தவை, இவைகள் எனக்குரிய ஆசிர்வாதங்கள். நான் ஏன் அவரை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்?" என்றான்.

உடனே அந்த தேவதூதன் "நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவை அனைத்தும் உன் வின்னபங்களுக்கு கிடைத்தது அல்ல, அந்த பெரியவரின் ஒரே ஒரு விண்ணப்பத்திற்கு கிடைத்த பதில்" என்று கூறினான். இதை கேட்ட அந்த வாலிபன் "அப்படி அவர் என்ன விண்ணப்பம் செய்தார்?" என்றான்.

"கடவுளே நீர் என்னோடு இருக்கிறீர், என்னை காக்கின்றீர். ஆனாலும் அந்த வாலிபன் சோர்ந்துபோகாமல் திடமனதாய் இருக்க, அவன் வீடு சென்று சேரும்வரை அவன் வேண்டுவது எல்லாவற்றையும் அவனுக்கு அருளவும்" - என்பதே அந்த பெரியவரின் விண்ணப்பம் என அந்த தேவதூதன் வெளிபடுத்தினான்.


நமக்கு கிடைப்பது எல்லாமே நமது பிரார்த்தனைக்கு மட்டுமே கிடைக்கும் பலன் அல்ல. நமக்காக வேண்டும் மற்றவர்களாலும் என்பதை மறக்கக்கூடாது.

தமக்காக வேண்டுவோரின் விண்ணப்பங்கள் தோற்கலாம், ஆனால் பிறருக்காக உண்மையாய் வேண்டினால் தேவன் நிச்சயம் பதிலளிப்பார்.

அதேபோல நாம் பிறருக்காக வேண்டும்போது நமக்காக பரிந்து பேச தேவதூதர்களே வருவார்கள் என்பதுவும் உண்மை.

(மத்தேயு 5:44-48)