Monday, June 1, 2009

யாருடைய பிரார்த்தனை கேட்கப்படும்

அமைதியாய் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல், திடீர் புயலினால் நிலைகுலைந்து உடைந்தது. அதில் பிரயாணம் செய்த மக்கள் நடு கடலில் தத்தளிக்க, ஒரு வாலிபனும், ஒரு பெரியவரும் மட்டும் ஒரு மரத்துண்டை பிடித்து ஒரு குட்டி தீவை அடைந்தனர். அங்கே செய்வதறியாது திகைத்த அவர்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மட்டுமே ஒரே வழி என்று உணர்ந்தனர்.

"நாம் இருவரும் தேவனை நோக்கி வேண்டுவோம், யாருடைய விண்ணப்பம் கேட்கபடுகிறது என்று பார்க்கலாம்" என்று அந்த வாலிபன் சொல்ல, அதை ஒப்புக்கொண்டவர்கலாய் இருவரும் ஆளுக்கொரு திசயாய் பிரிந்து சென்றனர்.

முதலில் அவர்கள் இருவரும் வேண்டியது தங்கள் உணவிற்காக, அந்த வாலிபன் கணிகளுடைய ஒரு மரத்தை கண்டு தன் பசியை போக்கிகொண்டான். ஆனால் அந்த பெரியவர் சென்ற திசையிலோ ஒன்றும் அகப்படவில்லை.

சில நாட்கள் சென்றபிறகு அந்த வாலிபன் தனிமயாக இருப்பதாக உணர்ந்து தனக்கொரு மனைவி வேண்டுமென வேண்டினான். அப்பொழுது கடலில் மிதந்து ஒரு பெண் அவனை தேடி வர, அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். பின்னர் தங்குவதற்கு வீடு, உணவு, உடை என தன் பட்டியலை நீட்டித்தான். ஆச்சர்யமாக மறுநாளில் அவை எல்லாமே அவனை தேடி வந்தது.

தீவு வாழ்க்கை சலித்துபோகவே அந்த வாலிபன் தன் மனைவியுடன் நாட்டுக்கு திரும்பநினைதான். எனவே இந்தமுறை தனக்கொரு கப்பல் வேண்டுமென வேண்டினான். மறுநாள் காலையில் தீவின் கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றதை கண்டு தன் மனைவியுடன் அதி ஏறி புறப்பட ஆயத்தமானான்.

அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தேவதூதன் அவனை நோக்கி, "உன்னோடு வந்த உன் உடனாளியை இந்த தீவில் விட்டு நீ மட்டும் எங்கே புறப்பட்டாய்?" என்று கேட்டான்.

அதற்க்கு அந்த வாலிபன், "இவை அனைத்தும் நான் தேவனிடம் வேண்டி கிடைத்தவை, இவைகள் எனக்குரிய ஆசிர்வாதங்கள். நான் ஏன் அவரை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்?" என்றான்.

உடனே அந்த தேவதூதன் "நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவை அனைத்தும் உன் வின்னபங்களுக்கு கிடைத்தது அல்ல, அந்த பெரியவரின் ஒரே ஒரு விண்ணப்பத்திற்கு கிடைத்த பதில்" என்று கூறினான். இதை கேட்ட அந்த வாலிபன் "அப்படி அவர் என்ன விண்ணப்பம் செய்தார்?" என்றான்.

"கடவுளே நீர் என்னோடு இருக்கிறீர், என்னை காக்கின்றீர். ஆனாலும் அந்த வாலிபன் சோர்ந்துபோகாமல் திடமனதாய் இருக்க, அவன் வீடு சென்று சேரும்வரை அவன் வேண்டுவது எல்லாவற்றையும் அவனுக்கு அருளவும்" - என்பதே அந்த பெரியவரின் விண்ணப்பம் என அந்த தேவதூதன் வெளிபடுத்தினான்.


நமக்கு கிடைப்பது எல்லாமே நமது பிரார்த்தனைக்கு மட்டுமே கிடைக்கும் பலன் அல்ல. நமக்காக வேண்டும் மற்றவர்களாலும் என்பதை மறக்கக்கூடாது.

தமக்காக வேண்டுவோரின் விண்ணப்பங்கள் தோற்கலாம், ஆனால் பிறருக்காக உண்மையாய் வேண்டினால் தேவன் நிச்சயம் பதிலளிப்பார்.

அதேபோல நாம் பிறருக்காக வேண்டும்போது நமக்காக பரிந்து பேச தேவதூதர்களே வருவார்கள் என்பதுவும் உண்மை.

(மத்தேயு 5:44-48)

No comments: