Tuesday, June 2, 2009

நம்பிக்கை

ஒரு ஊரில் ஒரு ஆமை தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவந்தது. ஒரு நாள் அது தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த ஆமை, தன் மனைவி மற்றும் மூன்று குட்டிகளுடன் பிரயாணத்தை தொடங்கியது. ஏறக்குறைய ஒரு ஆண்டு பிரயானதுக்குப்பின் அவைகள் ஒரு தோப்பை அடைந்தன. அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கவே, அங்கே இருந்து உணவருந்தலாம் என முடிவுசெய்து அதற்கு ஆயத்தமாயின. அப்போதுதான் உணவுக்கு உப்பு கொண்டுவராதது தெரிந்தது. இபொழுது அனைவரும் சென்றுவருவது தாமதம் ஆகும், எனவே கடைக்குட்டி ஆமையை மட்டும் வீட்டுக்கு அனுப்பி எடுத்துவர சொல்லலாம் என்று முடிவெடுத்தன. ஆனால் அவ்வளவு தூரம் தனியாக போகமுடியாது என அந்த குட்டி ஆமை சொல்லவே, நீண்ட நேரம் போராடி அந்த குட்டி ஆமையை சம்மதிக்கவைதனர். ஆனாலும் அந்த குட்டி "நான் திரும்ப வரும்வரை யாரும் சாப்பிட கூடாது" என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு புறப்பட்டது.

காலங்கள் போயின, ஏறக்குறைய ஒரு வருடம் தாண்டியது. இதுவரை அந்த குட்டி ஆமை வரவில்லை. இந்த நிலையில், மற்ற இரண்டு குட்டிகளும் பசியால் துடிக்க. உப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, நாங்கள் மட்டுமாவது சாப்பிடுகிறோம் என்று கூறின. ஆனால் தந்தை ஆமை சம்மதிக்காத நிலையில் இன்னும் சிலநாள் காத்திருந்தன. ஒரு நிலையில் அவைகளால் பொறுக்கமுடியாமல் உணவை திறந்து சாப்பிட தொடங்கின. உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னாலே இருந்து அந்த குட்டி ஆமை வெளியே வந்து, "நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் போகாமல், உங்களை கவனித்தேன்." என்று கூறியது.

இந்த குட்டி ஆமையின் செயலால், அதற்கும் பலனில்லை மற்றவர்களுக்கும் பயனில்லை.

எல்லோரையும் நம்பியவனும், யாரையும் நம்பாதவனும் நல்வாழ்வு வாழ தகுதியற்றவர்கள்.

"நம்பி வாழவேண்டும்; பிறர் நம்ப வாழவேண்டும்."

(ரோமர் 8:24,25)

No comments: