
வாலிபன்: தேவன்மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கையோ, பாசமோ இல்லை. நேரம் கிடைத்தால், எதாவது வேண்டுமென்றால் ஆலயம் செல்வேன். அப்படி இருக்கும்போதே நான் எது வேண்டினாலும் தேவன் தருகிறார். இப்படி இருக்க ஏன் நண்பன் ஒருவன் எப்போதும் தேவனை பற்றியே பேசுகிறான், தவறாமல் ஆலயம் செல்கிறான், தேவனுக்கு பயந்து நடக்கிறான். ஆனால் பலன்..?? அவனை விட எனக்கு நான் நினைத்த எல்லாமே கிடைக்குதே...!!!
தேவ ஊழியர்: நீ சொன்னது சரிதான். ஆனால் நான் ஒரு நிகழ்வை சொல்கிறேன் அதன் பிறகு உன் முடிவை சொல்.
பணக்கார தந்தை ஒருவர் இருந்தார், அவருக்கு ஒரே மகன். ஒருநாள் அதிகாலையில் அவர் வீட்டின் வாசலில் ஒரு யாசகம் கேட்பவர் வந்து ஐயா ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று கேட்டான். உடனே அவர் சென்று கொஞ்சம் உணவும், பத்து ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். வீட்டின் உள்ளே நுழையும் நேரத்தில் தன் மகன் படுக்கையில் இருந்துகொண்டே தாயை நோக்கி இரவு வாங்கிவந்த தின்பண்டத்தை கேட்பதை கவனித்தார். உடனே உள்ளே சென்று தன் மகனிடம் நீ எழுந்து பல் துலக்கி உன்னை சுத்தம் செய்தால் மட்டுமே அவைகள் உனக்கு கிடைக்கும் என்று கூறினார். அந்த மகனும் அவ்வாறே செய்து அதை பெற்றுகொண்டான்.
தர்மம் கேட்டு வந்தவன் குளித்தானா, சுத்தமாக உள்ளன என்றெல்லாம் பார்க்கவில்லை ஆனால் அதே தன் சொந்த குமாரன் என்று வரும்போது இவைகளை தந்தை எதிர்பார்ப்பது நியாயம் அல்லவா...?
தர்மம் கேட்டு வந்தவன், தனக்கு வேண்டுமென்று கேட்டது கிடைத்தது (பத்து ரூபாயும், உன்ன ஒரு வேலைக்கான உணவும்). ஆனால் சொந்த குமாரனுக்கோ தந்தைக்கு உள்ள முழு உரிமை, ஆஸ்தி, அவருக்குரிய மற்ற எல்லாமே தானாகவே கிடைக்கும் அல்லவா..???
இப்பொது உனக்கும் உன் நண்பனுக்கும் உள்ள வித்யாசம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாலிபன்: மௌனம்...!!!!
(உபாகமம் 2:13)
2 comments:
Nice explanation...Keep it up.May God Bless u my dear frnd.
Thank you mercy. Really ur words energised me.
Post a Comment