Wednesday, July 15, 2009

மனிதனின் வார்த்தைக்கே...

அதிகாலை நேரம், நல்ல குளிரான காலநிலை. அது ரஷ்யாவை வறுமை வாட்டிய நேரம். உலகின் பிரபல எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய், காலை நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது வழியில் வந்த ஒரு யாசகர் (பிச்சைக்காரன்) அவரிடம், "ஐயா எனக்கு உதவுங்கள்" என கேட்கவே, அவரும் தன் பைகளை துளாவினார். ஆனால் அவர் வந்த வழியில் இவ்வாறு வந்த பலருக்கு உதவியதால் இப்பொது அவரது பைகள் அவருக்கு உதவும் நிலையில் இல்லை.

என்ன செய்வது என்று குழம்பிய டால்ஸ்டாய், அந்த யாசகரை கட்டி அனைத்து "சகோதரரே தற்ப்போது உங்களுக்கு உதவ என்னிடத்தில் ஒன்றும் இல்லை, மன்னித்துக்கொள்ளவும்" என்று கூறினார்.

உடனே அந்த யாசகர், "பரவாயில்லை ஐயா, நீங்கள் என்னை சகோதரன் என்று அழைத்ததே எனக்கு மிகவும் பெரிய பரிசு" என்று கூறி கண்ணீர்மல்க விடைபெற்றார்.

மனிதனின் வார்த்தைக்கு கூட இவ்வளவு மதிப்பா..?? அப்படியானால் அதை சரியாக உபயோகிப்பதில் என்ன நஷ்டம்...?

மனிதனின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பென்றால், தேவனின் வார்த்தை...!!!!

(நீதிமொழிகள் 30:5)

No comments: