
45 ஆண்டு தேவ ஊழியத்துக்குப்பிறகு ஒரு தம்பதியர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தன் தாய்நாட்டிற்கு திரும்பினர். அவர்கள் திரும்புவதற்கு ஒரு கப்பலில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கப்பல் அருகே வந்தபோது அங்கே மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்ததை கண்டனர். அந்த கூட்டம் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது, "கோடையில் ஓய்வெடுக்க தங்கள் தாய்நாட்டு அதிபர் வந்துவிட்டு திரும்புகிறார். அவரை பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்" என்று அறிந்தனர்.
எல்லோரும் கப்பலில் ஏறினார், கப்பலும் புறப்பட்டது. எதையோ யோசித்தவாறு வந்த அந்த தேவ மனிதர் தன் மனைவியை நோக்கி, "நாம் தவறு செய்துவிட்டோமோ?. தேவனுக்காக ஊழியம் செய்த நமக்கு கிடைக்காத மரியாதை, மனிதர்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கிடைகிறதே!" என்று கேட்டார்.
அதற்க்கு அந்த மனைவி, "அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். தேவன் எது செய்தாலும் நன்மைக்காக தான் இருக்கும்" என்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
பயணம் தொடர்ந்தது, கப்பல் சேரவேண்டிய இடத்தை அடைந்தது. அங்கேயும் மிக பெரிய கூட்டம். வாத்தியங்கள் முழங்க, மாலைகளுடன் மக்கள் வரிசையில் நின்று அந்த அதிபரை வரவேற்றனர். இந்த ஊழியரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர் தன் மனைவியுடன் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டுக்கு வந்த அவருக்கு தனது இந்த பயணம் மிக பெரிய ஒரு குழப்பமாகவே இருந்தது. திரும்பவும் தன் மனைவியிடம் தனது நிலயை அவர் கூற. இந்த முறையும் மனைவி அமைதியாய் அவரை நோக்கி, "நீங்கள் ஏன் ஜெப அறைக்கு சென்று உங்களது இந்த கேள்விகளை தேவனிடமே கேட்கக்கூடாது?" என்றால்.
அவரும் அதை ஏற்றுக்கொண்டு ஜெப அறைக்கு சென்றார். ஒருமணி நேரம் கழித்து வெளியில் வந்த அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அவரை கண்ட மனைவி "உள்ளே பதில் கிடைத்ததா..? என்ன பதில்..?" என்று கேட்டால்.

நீங்களும் இன்னும் வீடு திரும்பவில்லை. உங்கள் கொடுக்கப்பட்டுள்ள கடமையை முடித்து திரும்பும்போது நிச்சயம் அதன் பலன் அதிகமாய் இருக்கும்.
(2 பேதுரு 1:10,11)
No comments:
Post a Comment