Tuesday, August 11, 2009

சந்தோஷத்தின் சாவி

என் தாய்க்கு தினமும் விதவிதமான உணவுகளை செய்து அசத்துவது வழக்கம். அதிலும் இரவு உணவு மிகவும் சிரமம் எடுத்து சிறப்பாக செய்வார்கள். ஒரு நாள் இரவு நானும் என் தந்தையும் இரவு உணவிற்காக காத்திருந்தோம். அப்பொழுது என் தாய் கருகிய நிலையில் இருந்த ரொட்டிகளையும், முட்டையும் கொண்டுவந்து என் தந்தை முன்னால் வைத்தார்கள். நானோ என் தந்தையை பார்த்தவாறே எனக்கு வைக்கப்பட்ட நல்ல ரொட்டிகளை சாப்பிட்டு முடித்தேன். என் தந்தையும் ஏதும் கூறாமல் வைத்த அனைத்து ரொட்டிகளையும் சாப்பிட்டு முடித்தார்.

நான் அங்கிருந்து எழுந்தவுடனே என் தந்தையிடம் கருகிய ரொட்டிகளை வைத்ததற்க்காக என் தாய் வருந்தியதையும் நான் கவனிக்க தவறவில்லை. அதே சமயம் என் தந்தையோ "நீ இதற்க்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். ரொட்டிகள் முறுகலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்" என்று என் தாயிடம் கூறினார்.

எல்லாம் முடிந்து நான் என் தந்தையுடன் படுக்கையறைக்கு சென்றேன், அப்போது நான் என் தந்தையிடம் கேட்டேன், "நிஜமாகவே உங்களுக்கு ரொட்டிகள் கருகியிருந்தால் பிடிக்குமா?".

அவர் புன்னகையுடன், "நிச்சயம் இல்லை. ஆனால் எப்போதும் உன் தாய் சிறப்பான உணவையே நமக்கு வழங்குவாள். அப்படி இருக்க, இன்று இப்படி கொடித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் அதிக வேலையினால் சோர்ந்து போயிருக்கவேண்டும். இந்த நிலையில் நானும் அவளை குறை கூறினால் அவள் இன்னும் சோர்ந்துவிடுவாள்." என்றார்.

மேலும் அவர், "நான் அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு உதவியாக இருக்க தவறினாலும், அவளை புரிந்துகொள்ளவும், அவள் தவறுகளை பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டேன்." என்று கூறினார்.

நமது சந்தோஷத்தின் சாவி நம்மிடம் தான் இருக்கவேண்டும், அதை இன்னொருவர் பையில் போட்டுவிட்டால் நம் வாழ்க்கை இன்பமாக இருக்காது.


இவை அனைத்துக்கும் அன்பே பிரதானம்.

(1 கொரிந்தியர் 13:1-10)

No comments: