Monday, August 17, 2009

தீப்பற்றிய வீடு...

கடல் வணிகர் ஒருவர் தனது பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தால் ஒரு குட்டி தீவை அடைந்தார். அது ஒரு மணல் திட்டால் ஆனா தீவாக இருந்ததால் அவருக்கு ஒதுங்க கூட ஒரு நிழல் இல்லை. பச்சை மீன்களே உணவாக போனது. இப்படியே நாட்கள் நகர, உதவ கூட ஆள் இல்லாத நிலையில் அவர் தேவனை நோக்கி வேண்டினார். அவர் தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாக இருந்தபடியால் அவரது ஜெபம் கேட்கப்பட்டது. மறுநாள் காலையில் அந்த தீவருகே ஒரு சிறிய குடிசை மிதந்து வந்தது. அதில் அனைத்து விதமான உணவுகளும் இருந்தது. தேவனுக்கு நன்றி சொல்லிய அந்த மனிதன் அதை எடுத்து பயன்படுத்திக்கொண்டார். அதில் இருந்த உணவுகள் தீர்ந்த நிலையில், தேவனை தன்னை சீக்கிரம் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டு பின்னர் மீன் பிடிக்க சென்றுவிட்டார்.

நேரம் சென்று திரும்பிய அவர் தனது குடிசைக்கு நேராக ஒரு மின்னல் தாக்குவதையும் அதனால் தன் குடிசை தீ பற்றி எரிவதையும் கண்டார். மனம் தாளாத வேதனையினால் கலங்கிப்போன அவர், தன்னை அறியாமலேயே உறங்கிவிட்டார். மறுநாள் காலை ஒரு கப்பல் தனது தீவை நோக்கி வருவதை கண்டு உற்சாக வெள்ளத்தில் குதித்த அவர், அந்த கப்பலின் மாலுமியிடம் "நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்டார். அதற்க்கு அந்த மாலுமி, "நேற்று இரவு இங்கே தீயின் வெளிச்சம் தெரிந்தது, அதை கண்டே நாங்கள் வந்தோம்" என்றார்.

தேவனுக்கு நன்றி கூரியவராய் அவர் அந்த கப்பலில் புறப்பட்டார்.

தேவன் ஒரு ஆசிர்வாதத்தை கொடுத்தாலும், அதை எடுத்தாலும் நிச்சயம் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.

(எண்ணாகமம் 23:19)

No comments: