
அந்த பெரியவர் தன் கையில் ஒரு பழைய பெட்டியுடன் வந்தார். அவரிடம் நிலைமையை கூறிய கப்பல் முதலாளி அவரை கப்பலுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற அந்த பெரியவர், சிறிது நேரம் நன்றாக கப்பலை ஆராய்ந்தார், பின்னர் தன் பையில் இருந்து ஒரு சுத்தியலை எடுத்து அந்த கப்பலில் இருந்த ஒரு குழாயின் மேல் லேசாக தட்டி அதை சரிசெய்துவிட்டு சென்றார்.
கொஞ்ச காலம் சென்ற பின்பு அந்த பெரியவர் கப்பல் முதலாளி தனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கேட்டு கடிதம் போட்டார். அதில் ரூபாய் பத்தாயிரம் கேட்கப்பட்டிருந்தது. அதை கண்ட கப்பல் முதலாளி இரண்டு நிமிட வேலைக்கு இவ்வளவு கூலியா ? இதற்கான விளக்கம் தரவும் என பதில் கடிதம் போட்டார்.
அதற்கு அந்த பெரியவர், குழாய் சரி செய்ய இருநூறு ரூபாய், ஆனால் அந்த குறையை கண்டறிய ஒன்பதாயிரத்து எண்ணூறு ரூபாய் என பதில் அனுப்பி அந்த பணத்தை பெற்றார்.
"கடின உழைப்பு முக்கியம் தான் , ஆனால் காரியம் அறிந்து செயல்படுவது அதை விட முக்கியம்"
2 comments:
without pain no gain
ya its true. But without meaningful pain then there is no gain.
Post a Comment