Monday, February 16, 2009

ஏழை பெண்ணும் தேவனும் - குட்டி கதை














ஒரு நாள் ஒரு ஏழை பெண் தன் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று அங்கே அவர்களோடு சேர்ந்து தேவனை துதிக்க விரும்பினால். அப்பொழுது அந்த ஆலயத்தை சேர்ந்தவர்கள் அதிக பணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பிவிட்டனர். அவள் மிகவும் மனபாரத்துடன் அந்த ஆலயத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தால்.

அந்த சமயத்தில் அந்த வாசல் வழியாக ஒரு பெரியவர் வந்தார். அவர் அந்த பெண்ணிடம் அவள் அங்கே நிற்கும் காரணத்தை கேட்டார், அவளும் நடந்த எல்லாவற்றையும் கூறினால். அதைக் கேட்ட அவர் மிகவும் மனவேதனையுடன் "அவர்கள் என்னையும் உள்ளே அனுமதிப்பதில்லை" என்று கூறினார்.

அதற்கு அவள் நீங்கள் யார் ஐயா என்று கேட்டால், அவர் "நானே சர்வத்தையும் படைத்த தேவன்" என்று கூறினார்.

தேவன் பணத்தை பார்ப்பவர் இல்லை, மனதை பார்ப்பவர்.


2 comments: