Monday, June 8, 2009

பழைய காலனி

ஓர் அழகிய கிராமத்தின் வயல்வெளி வழியாக ஒரு ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டே நடந்துசென்றர்கள். அப்போது வழியில் ஒரு ஜோடி பழைய காலணியும் அதன் அருகே ஒரு பழைய ஆடையும் இருந்தது. அதை கண்ட அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்க, தூரத்தில் ஒரு பெரியவர் வயலில் வேலை செய்வதை கண்டு அது அவருடையது தான் என உறுதி செய்தனர்.

உடனே அந்த மாணவன், ஆசிரியரை நோக்கி; "இந்த பழைய காலனியை வைத்து நம் ஒரு வேடிக்கை பார்க்கலாமா?. இதை எடுத்து மறைத்துவிட்டு நாமும் அந்த புதரின் அருகே மறைந்திருப்போம். இந்த பழைய காலனிக்காக அந்த பெரியவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்." என்றான்.

அதை கேட்ட அந்த ஆசிரியர்,

"தம்பி உன் குறும்பு சரியானதுதான், ஆனால் அதை அவருடைய வறுமையை வைத்து விளையாடாமல் உனது செல்வத்தை வைத்து விளையாடலாமே..!!

நீ சொன்னதுபோல அந்த காலனியை மறைத்துவைத்து விளையாடுவதற்கு பதிலாக, அந்த ஒவ்வொரு காலனியிலும் ஒரு காசை போட்டுவிட்டு நாம் மறைந்திருப்போம். அப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்." என்றார்.

அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு மறைந்திருந்தனர்.

அந்த பெரியவரும் தன் வேலையை முடித்து கரைக்கு வந்தார். அங்கே இருந்த தனது உடைகளை எடுத்துக்கொண்டு தன் காலனியை அணிய முயற்சித்தார். அப்பொழுது தன் காலில் ஏதோ ஒன்று உறுத்துவது போல உணர்ந்த அவர் தன் காலனியை பரிசோதித்தார். அதில் இருந்த காசை தன் கையில் எடுத்து, யாருடையதாக இருக்கும் என்று சுற்றிலும் பார்த்தார். ஒருவரும் இல்லாததால் அதை தன் சட்டை பையில் போட்டுக்கொண்டு, மற்றொரு செருப்பை அணிய சென்றார். அதிலும் ஒரு காசை கண்ட அவர், உடனே தன் கால்களால் முடக்கி வானத்துக்கு நேராக தன் முகத்தை உயார்த்தி,

"கடவுளே, உமக்கு மிகவும் நன்றி. உடல் நலம் குன்றி உதவ யாருமே இல்லாமல் மனைவியும், அடுத்த வேலை உணவுக்கு வழிதெரியாத என் பிள்ளைகளையும் போஷிக்க யாரென்றே தெரியாத ஒருவரால் எனக்கு நீர் கொடுத்த இந்த காசுக்காக நன்றி. இந்த காசை எனக்காக விட்டுச்சென்ற அவரையும், அவர் குடும்பத்தையும் நீர் ஆயிரம் மடங்கு ஆசிர்வதிக்கவேண்டும்" என்று வேண்டினார்.

இதை கண்ட அந்த மாணவன் கண்களில் கண்ணீர் வெள்ளம். உடனே அவன் அந்த ஆசிரியரை நோக்கி "இந்த நாளும், இந்த சம்பவமும், நீங்கள் கற்றுகொடுத்த இந்த பாடமும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. உங்களுக்கு என் மனப்பூர்வ நன்றி....!!!" என்று கூறினான்.


(யாக்கோபு 2:5-9)

4 comments:

Pons said...

Nice Story... Continue...

..செந்தில் said...

Thanks for your visit and comment. Keep visiting

Unknown said...

good.... ethala yaga iruthu theredena pa

..செந்தில் said...

சொந்தமோ திருட்டோ, நாலுபேருக்கு நல்லது நடக்கும் என்றால் எதுமே தப்பு இல்ல.