இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க வீரர் சென்ற கப்பல் ஒன்று எதிரிகளால் தகர்க்கப்பட்டது. அந்தசமயம் அவர் அருகில் இருந்த ஒரு குட்டி தீவிற்குள் நீந்தி கரையேறினார். ஆனால் அவர் இருக்கும் திசை நோக்கி ஒரு எதிரி நாட்டு கப்பல் வருவதை கண்டார், அதில் உள்ள ஒரு வீரன் தன்னை கண்டுவிட்டத்தையும் அவர் அறிந்தார். இந்த சமயத்தில் அவர்கள் கையில் சிக்கினால் நிச்சயம் மரணம்.இந்த நிலையில், அவர் தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து, பின்னர் அங்கே இருந்த ஒரு குகைக்குள் சென்று மறைந்துக்கொண்டார். அவர் குகை பகுதிக்குள் செல்வதை கண்ட அந்த வீரர்கள் ஒவ்வொரு குகையாக சென்று பார்த்தனர். அவர்கள் இந்த மனிதன் இருக்கும் குகை அருகே வர வர இவருக்கு பயம் அதிகமானது. அந்த சமயம் மீண்டும் தேவனை நோக்கி மன்றாடினார். அப்போது அவர் அருகே ஒரு சிலந்தி வருவதை அவர் கண்டார், அந்த சிலந்தி அவர் இருந்த குகை வாயிலில் வலையை பின்னத்தொடங்கியது. இதை கண்ட அவர், "இறைவா! இந்த நேரத்தில் எனக்கு தேவை பலமான ஒரு சுவர்; ஆனால் இங்கே இருப்பதோ சிலந்தி வலை." என்று வருந்தினார். அந்த சமயத்துக்குள் அந்த சிலந்தி தன் முழு வலையையும் பின்னி முடித்து; அதே சமயம் அந்த வீரர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கே வந்த அந்த வீரர்கள், குகை வாசலில் சிலந்தி வலை உள்ளது, எனவே யாரும் உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்று அங்கிருந்து சென்றனர். அந்த மனிதரும் உயிர் பிழைத்தார்.
தேவன் ஒருவனை காக்க, மதில்கள் தேவையில்லை; சிலந்தியின் வலை கூட போதும்.
(ஏசாயா 49:15,16)
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்.
(யோவான் 11:40)








