
ஒரு நாள் பெரியவர் ஒருவர் கால்நடையாக செல்லும்போது, வழியில் ஒரு சிற்பி ஒரு சிலையை செதுக்குவதை கண்டார். ஆனால் அதன் அருகிலும் அவர் செதுக்குவது போலவே இன்னொரு சிலையும் இருந்தது. அதனை கண்ட அவர் அந்த சிற்பியிடம் "ஒரே மாதிரியான இரண்டு சிலை செய்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அந்த சிற்பி, இல்லை ஐயா. நான் செய்த முதல் சிலையில் ஒரு குறை உள்ளது, எனவே புதிதாக இன்னொன்றை செய்கிறேன் என்றார். இந்த பெரியவருக்கு ஒரே குழப்பம், இந்த சிலையில் என்ன குறை உள்ளது ? என்னால் ஏதும் காணமுடியவில்லையே என்று சொன்னார். அதற்கு அந்த சிற்பி, அந்த சிலையில் மூக்கு பகுதியில் லேசான ஒரு வெட்டு உள்ளது என்று சொல்லியவாரே தன் வேலையை தொடர்ந்தார்.
இதை கெட்ட அந்த பெரியவர், இந்த சிலையை எங்கே வைக்க போகிறிர்கள்? என்று கேட்டார். அந்த சிற்பி, 20 அடி உயர ஒரு கட்டிடத்தின் மேலே என்று கூறிக்கொண்டே தன் வேலையை தொடர்ந்தார்.
20 அடி உயரத்தில் தானே? இதில் இருக்கும் குறை யாருக்கு தெரியும்? - என்று அந்த பெரியவர் கேட்டார். உடனே தான் செய்யும் வேலையே நிறுத்தி, அந்த பெரியவரை நோக்கிய சிற்பி "எனக்கு தெரியுமே..!!!" என்று சொன்னார்.
"பிறர் பாரடுக்காகவோ , பெருமைக்காகவோ செய்வது சிறந்த வேலை ஆகாது.
சிறந்த வேலை என்பது செய்யும் நம்முடைய திறமைக்காகவும், மன திருப்திக்காகவும் இருக்க வேண்டும்."
No comments:
Post a Comment